யுனிவர்சிட்டி டெக்னாலஜி மாராவில் பூமிபுத்ரா அல்லாத மாணவர்களை அனுமதிப்பதைத் தடைசெய்யும் எந்த விதியும் சட்டத்தில் இல்லை என்று உரிமைக்கான வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
அந்த மனித உரிமைகள் குழுவின் இயக்குனர் சைட் மாலிக் (Zaid Malek) இன்று வெளியிட்ட அறிக்கையில், குறிப்பாக கூட்டாட்சி அரசியலமைப்பின் 153 வது பிரிவைக் குறிப்பிடுகிறார்.
“இந்தப் பிரச்சினையில் பல்வேறு தரப்பிலிருந்து வந்துள்ள பல அறிக்கைகள், அரசியலமைப்பின் 153 வது பிரிவின் அர்த்தத்தையும் UiTM உடனான அதன் தொடர்பையும் தவறாகப் புரிந்துகொண்டு திரித்துவிட்டன.
“70களின் முற்பகுதியில் இருந்து அடுத்தடுத்து வந்த அரசாங்கங்களும் அரசியல் தலைவர்களும் தேச ஒற்றுமை என்ற அரசியல் ஆதாயத்திற்காக 153 வது பிரிவின் பயன்பாட்டை தொடர்ந்து தவறாகப் புரிந்துகொண்டு தவறாகப் பயன்படுத்தியதால் இது ஆச்சரியமில்லை. என்று அவர் கூறினார்.
பூமிபுத்தரா அல்லாதவர் இருதய அறுவை சிகிச்சை முதுகலை திட்டத்தில் சேர அனுமதிக்கும் முன்மொழிவுக்கு எதிராக போராடும் UiTM மாணவர்களுக்கு பெர்சத்து இளைஞர்கள் ஆதரவு தெரிவித்ததற்கு பதிலாக அந்தக்குழு சாடியது.
அரசியலமைப்பின் பிரிவு 153 (2) யாங் டி-பெர்டுவான் அகோங், மலாய்க்காரர்கள் மற்றும் பூர்வீகவாசிகள் மற்றும் சபா மற்றும் சரவாக் ஆகியோருக்கான கல்விச் சலுகைகளின் நியாயமான விகிதத்தை தீர்மானிக்க அனுமதிக்கிறது என்று ஜைட் விளக்கினார்.
அதோடு விதி 153(1) யைப் பயன்படுத்தும் போது மற்ற சமூகங்களின் நியாயமான நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று அது தெளிவாகக் கூறுகிறது.
“எனவே, 153வது பிரிவுக்குள் பூமிபுத்தரா அல்லாதவர்கள் UiTM படிப்புகளில் சேர அனுமதிப்பது அரசியலமைப்பிற்கு விரோதமானதாக எதுவும் இல்லை” என்று ஜைட் கூறினார்.
“நியாயமான விகிதாசாரம்’ என்ற வார்த்தையின் பயன்பாடு, UiTM இன் திட்டங்களில் ஏதேனும் ஒன்றில் சேருவதற்கு மலாய்க்காரர்கள் அல்லாதவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட ஒதுக்கீட்டைப் பங்கீடு செய்வது அவசியம் என்று மாமன்னர் தீர்மானிக்க வேண்டும் என்றால், அது அரசியலமைப்பின் 153 க்கு இணங்குவதாக இருக்கும்.,” என்று அவர் மேலும் கூறினார்.
அதிகாரம் அரசிடம் உள்ளது
அரசியலமைப்பு விதி 153 (2) இன் கீழ் கல்வி நோக்கங்களுக்கான ஒதுக்கீட்டின் நியாயமான விகிதத்தை நிர்ணயிப்பது 40 வது பிரிவின் விதிகளுக்கு உட்பட்டது, அதாவது இந்த விஷயத்தில் அமைச்சரவையின் ஆலோசனைக்கு மாமன்னர் கட்டுப்படுகிறார் என்று சைட் குறிப்பிட்டார்.
“இறுதியில் முடிவெடுக்கும் அதிகாரம் அரசாங்கத்திடம் உள்ளது. அரசாங்கத் தலைவர்கள் தங்கள் செயல்களுக்கான பொறுப்பை அரசியலமைப்பு காரணம் காட்டி மாமன்னரை இணைக்க முயற்சிக்கும் சமீபத்திய போக்கின் காரணமாக நான் இதை தெளிவாகக் கூறுகிறேன்.
“UiTM இன் இருதய அறுவை சிகிச்சை முதுகலைத் திட்டத்தைத் திறப்பதற்கான முன்மொழிவு, மலேசிய மக்களுக்குச் சேவை செய்வதற்குத் தேவையான இருதய அறுவை சிகிச்சை நிபுணர்களின் எண்ணிக்கையின் கடுமையான பற்றாக்குறையிலிருந்து வருகிறது. இந்தக் கருத்தில் 153வது பிரிவின் மீறல் எதுவும் இல்லை, அதாவது அது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது அல்ல. ”
நமது சுகாதார அமைப்பின் மோசமான நிலையை புறக்கணிக்கும் “தீவிர ஆர்வமுள்ள இனவாதிகளின்” கோரிக்கைகளை வேண்டாம் என்று சைட் அரசாங்கத்தை வலியுறுத்தினார்.
UiTm வரி செலுத்துவோரின் பணத்தால் செயல்படுகிறது., எனவே நாட்டின் சுகாதார அமைப்பு மேலும் மோசமடையாமல் இருப்பதை உறுதிசெய்ய அது செயல்பட வேண்டும், என்றார்.
“அறுவைசிகிச்சை நிபுணர்கள் போதாத நிலையில் வாழ்வா-இறப்பா என்பது அனைவரையும் பாதிக்கும்
“அரசியல் அமைப்பு பூமிபுதேரா மற்றும் பூமிபுதேரா அல்லாதவற்றுக்கு இடையே வேறுபாடுகளை ஏற்படுத்துகிறது, ஆனால் நோய் அப்படி அல்ல” என்று சைட் கூறினார்.