சரவாக் அரசு ஊழியர்களுக்கு 2 மாத சம்பள உதவித்தொகை மற்றும் மத்திய ஊழியர்களுக்கு 700 ரிங்கிட் வழங்க முடிவு

மாநில அரசு ஊழியர்களுக்கு இரண்டு மாத சம்பளத்திற்கு இணையான சிறப்பு நிதியுதவியையும், மாநிலத்தில் பணியாற்றும் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒருமுறை மட்டும் வழங்கப்படும் 700 ரிங்கிட் நிதியுதவியையும் சரவாக் அரசாங்கம் இன்று அறிவித்துள்ளது.

மத்திய அரசு மற்றும் மாநில அரசு ஊழியர்களின் நவம்பர் மாதக் கடைசி அடிப்படைச் சம்பளத்தின் அடிப்படையில் இந்த நிதியுதவி வழங்கப்படும் என்றும், இந்த ஆண்டு இறுதிக்குள் இதற்கான பணம் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றும் பிரீமியர் அபாங் ஜொஹாரி ஓபெங் தெரிவித்தார்.

இந்த நிதியுதவியின் மூலம் 19,851 சரவாக் மாநில அரசு ஊழியர்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது, இதற்காக மதிப்பிடப்பட்டுள்ள செலவு 144 மில்லியன் ரிங்கிட் ஆகும், என்று மாநில சட்டமன்றத்தில் 2027 ஆம் ஆண்டுக்கான மாநில வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தை நிறைவு செய்து பேசியபோது அவர் கூறியதாக பெர்னாமா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சரவாக்கில் உள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கான ஒருமுறை வழங்கப்படும் 700 ரிங்கிட் நிதியுதவி மூலம் 132,347 பணியாளர்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும், இதற்கான மதிப்பிடப்பட்ட செலவு 93 மில்லியன் ரிங்கிட் என்றும் அபாங் ஜொஹாரி தெரிவித்தார். இந்தத் தொகை 2027 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் வழங்கப்படும்.

சரவாக் மாநில அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற 10,141 பயனாளிகளுக்கு தலா 500 ரிங்கிட் வீதம் ஒருமுறை நிதியுதவி வழங்குகிறோம், இதற்கான மதிப்பிடப்பட்ட செலவு 5.1 மில்லியன் ரிங்கிட் ஆகும், என்று அவர் கூறினார்.

மேலும், சரவாக்கில் உள்ள ஆறு ஊடகச் சங்கங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள தனியார் ஊடகவியலாளர்களுக்கு தலா 700 ரிங்கிட் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் அபாங் ஜொஹாரி அறிவித்தார்.

சரவாக்கில் உள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கான ஒருமுறை வழங்கப்படும் 700 ரிங்கிட் நிதியுதவி மூலம் 132,347 பணியாளர்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும், இதற்கான மதிப்பிடப்பட்ட செலவு 93 ரிங்கிட் மில்லியன் என்றும் அபாங் ஜொஹாரி தெரிவித்தார். இந்தத் தொகை 2027 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் வழங்கப்படும்.

-fmt