பள்ளி வன்முறை சம்பவங்களுக்காக கல்வி அமைச்சர் ஃபத்லினா சிடெக் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகளை இரண்டு பக்காத்தான் ஹராப்பான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதுபோன்ற சம்பவங்களுக்கு அமைச்சர்கள் மட்டுமே முழுப்பொறுப்பேற்க முடியாது என்று அவர்கள் வாதாடியுள்ளனர்.
ஒவ்வொரு சாலை விபத்துக்கும் ராஜினாமா செய்ய வேண்டும் என்றால், இதே தர்க்கத்தின் அடிப்படையில் அரசாங்கம் பல அமைச்சரவை அமைச்சர்களை மாற்ற வேண்டியிருக்கும் என்று சானி ஹம்ஸான் (PH-ஹுலு லங்காட்) கூறினார்.
பல மாநிலங்களில் நிலவும் அதிகப்படியான போதைப்பொருள் பயன்பாட்டு விகிதங்களைச் சுட்டிக்காட்டி, ஃபத்லினாவின் ராஜினாமா கோரிக்கையை கேள்வி எழுப்பிய அமினோல்ஹுதா ஹாசனுக்கு (PH-ஸ்ரீ காடிங்) பதிலளிக்கும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
2024ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்களைச் சுட்டிக்காட்டிய அமினோல்ஹுதா, 100,000 குடியிருப்பாளர்களுக்கு 980 வழக்குகள் என்ற அளவில் கிளாந்தான் மாநிலம் மிக உயர்ந்த போதைப்பொருள் பயன்பாட்டு விகிதத்தைப் பதிவு செய்துள்ளது என்றும், அதைத் தொடர்ந்து திராங்கானு (925), பெர்லிஸ் (884) மற்றும் கெடா (790) ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளதாகவும் கூறினார்.
ஒரு மாணவர் அச்சுறுத்தப்பட்டாலோ அல்லது அராஜகத்திற்கு (Bullying) உள்ளாக்கப்பட்டாலோ கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கைகள் எழுகின்றன. அப்படியானால், போதைப்பொருள் பயன்பாட்டு விகிதம் அதிகமாக உள்ள இந்த நான்கு மாநிலங்களின் நிலை என்ன? என்று அமினோல்ஹுதா கேள்வி எழுப்பினார்.
போதைப்பொருள் பயன்பாடு என்பது ஒரு தேசியப் பிரச்சினை என்றும், இதற்கு தனிப்பட்ட மாநில அரசாங்கங்களைக் குற்றம் சாட்டுவதை விட கூட்டு நடவடிக்கை தேவை என்றும் சானி கூறினார்.
நான் கிளாந்தான், திராங்கானு, பெர்லிஸ் அல்லது கெடா அரசாங்கங்களை நோக்கிக் விரல் நீட்ட விரும்பவில்லை; ஏனெனில் இது நம் அனைவரின் கூட்டுப் பிரச்சினை,” என்று அவர் கூறினார்.
போதைப்பொருள் பயன்பாடு என்பது நாட்டில் நிலவும் ஒரு கடுமையான பிரச்சினை என்று வர்ணித்த அவர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், அரசு முகமைத் தலைவர்கள் மற்றும் சமூகத் தலைவர்கள் என அனைவருக்கும் அதை ஒழிப்பதில் கூட்டுப் பொறுப்பு உள்ளது என்று கூறினார்.
பள்ளிகளில் நடக்கும் வன்முறைகளை அவர் கையாண்ட விதம் குறித்து, குறிப்பாக கடந்த ஆண்டு சபாவில் 13 வயது சிறுமி ஜாரா கைரினா மகாதிர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, கல்வி அமைச்சர் ஃபத்லினா பதவி விலக வேண்டும் என்று பாஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
போதைப்பொருள் பயன்பாடு என்பது நாட்டில் நிலவும் ஒரு கடுமையான பிரச்சினை என்று வர்ணித்த அவர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், அரசு முகமைத் தலைவர்கள் மற்றும் சமூகத் தலைவர்கள் என அனைவருக்கும் அதை ஒழிப்பதில் கூட்டுப் பொறுப்பு உள்ளது என்று கூறினார்.
பள்ளிகளில் நடக்கும் களை அவர் கையாண்ட விதம் குறித்து, குறிப்பாக கடந்த ஆண்டு சபாவில் 13 வயது சிறுமி ஜாரா கைரினா மகாதிர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, கல்வி அமைச்சர் ஃபத்லினா பதவி விலக வேண்டும் என்று பாஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த அக்டோபர் 21 அன்று, சரவாக்கின் கூச்சிங்கில் உள்ள ஒரு சர்வதேசப் பள்ளியில் 16 வயது ஆண் மாணவர் ஒருவர் பெண் ஆசிரியை ஒருவரை கோடாரியால் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
மலேசியாவில் சுமார் 10,200 பள்ளிகளும் மில்லியன் கணக்கான மாணவர்களும் உள்ளனர் என்பதைச் சுட்டிக்காட்டிய சானி, பள்ளிகளில் வன்முறைகளை அல்லது வன்முறைச் சம்பவங்கள் நடக்கும்போதெல்லாம் அரசாங்கத்தைக் குற்றம் சாட்ட முடியாது என்று கூறினார்.
இது நமது குழந்தைகளை உள்ளடக்கிய ஒரு பிரச்சினை. அதனால்தான் நாம் அரசாங்கத்தை மட்டும் குற்றம் சாட்ட முடியாது, என்று அவர் கூறினார்.
ஒரு சமூகமாக நமது பங்கு என்ன? தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், கிராமத் தலைவர்கள் மற்றும் சமூகத் தலைவர்களாக நமது பங்கு என்ன? வீட்டில் தந்தையாக, சகோதரனாக, சகோதரியாக நமது பங்கு என்ன? இரு பிரச்சினைகளுக்கும் பரந்த சமூகத்தின் பங்களிப்பு தேவை என்று கூறிய அவர், போதைப்பொருள் பயன்பாடு மற்றும் வன்முறைகளை ஆகியவற்றை ஒழிக்க அனைத்து தரப்பினரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
-fmt
























