ஷாரிஸாட் அவதூறு வழக்குத் தொடுக்கிறார்

ஷாரிஸாட் அப்துல் ஜலிலில் என்எப்சி ஊழல் தொடர்பில் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்ற நெருக்குதல் அதிகரித்து வருகிறது. அதற்கிடையில் அவர் தம்மைக் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்ற இருவர் மீது வழக்குத்  தொடுத்துள்ளார்.

அந்த மகளிர், சமூக, குடும்ப மேம்பாட்டு அமைச்சர், பிகேஆர் மகளிர் பிரிவுத் தலைவி சுராய்டா கமாருதின், அதன் வியூகப் பிரிவுத் தலைவர் ராபிஸி இஸ்மாயில் ஆகியோர் மீது வழக்குத் தொடுத்துள்ளார்.

தற்போது மூன்று வார விடுமுறையில் இருக்கும் ஷாரிஸாட், கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் இன்று தமது சிவில் வழக்கைத் தாக்கல் செய்தார்.

சுராய்டாவும்  ராபிஸியும்  தம்மைப் பற்றி அவதூறு கூறியுள்ளதாக அவர் அதில் கூறிகொண்டுள்ளார்.

பொதுவான பாதிப்புக்காக 50 மில்லியன் ரிங்கிட்டையும் தனிப்பட்ட, கடுமையான பாதகங்களுக்காக மேலும் 50 மில்லியன் ரிங்கிட்டையும் ஷாரிஸாட் தமது வழக்கில் கோரியுள்ளார்.

அந்த வழக்கை ஷாரிஸாட் சமர்பிப்பதற்கான காரணங்கள் குறித்து அவருடைய வழக்குரைஞரான முகமட் ஷாபீ அப்துல்லாவிடம் வினவப்பட்டது. அதற்குப் பதில் அளித்த அவர், என்எப்சி மீது இப்போது மேற்கொள்ளப்பட்டு வருகிற புலனாய்வு தம்மைக் குற்றமற்றவர் என மெய்பிக்கும் என அம்னோ மகளிர் தலைவி நம்பிக்கை கொண்டுள்ளதாகச் சொன்னார்.

TAGS: