மிதவாதத்தைக் கடைப்பிடியுங்கள் என பிரதமர் சாப் கோ மே விழாவில் சொல்கிறார்

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தமது மிதவாதச் செய்தியைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்த முறை அதனை அவர் சிலாங்கூர் ஜெஞ்சாரோம்-ல்  சாப் கோ மே கொண்டாட்டங்களின் போது கூடியிருந்த 50,000 பேர்களிடம் கூறினார்.

“நாம் சமய ரீதியாக மாறுபட்டிருந்தாலும் எல்லா சமயங்களிம் மிதவாதம் காணப்படுகிறது. நம்மிடையே தீவிரவாதம், வெறித்தனம், மூர்க்கத்தனம் அல்லது வன்முறை சித்தாந்தம் ஆகியவற்றைப் பின்பற்றுவதில்லை என்ற புரிந்துணர்வை மிதவாதம் சுட்டிக் காட்டுகிறது.”

“பௌத்த சமயத்தில் ‘zhong yong’ என்றால் மிதவாதம் எனப் பொருள்படும் என எனக்குக் கூறப்பட்டது. அதனை அவர் மண்டரின் மொழியில் கூறிய போது கூட்டத்தினர் கை தட்டினர்.

Fo Guang Shan Dong Zen கோயிலில் நடைபெற்ற அந்தக் கொண்டாட்டங்களுக்கு சிலாங்கூர் பிஎன் -னும் கோயிலும் கூட்டாக ஏற்பாடு செய்திருந்தன.

அந்த நிகழ்வில் மசீச துணைத் தலைவர் லியாவ் தியோங் லாய், சிலாங்கூர் அம்னோ துணைத் தலைவர் நோ ஒமார், சிலாங்கூர் மசீச தலைவர் டொனால்ட் லிம் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

பிரதமர் உரையாற்றுவதற்கு முன்னதாக உள்நாட்டு, தைவான் கலைஞர்கள் நிகழ்ச்சிகளைப் படைத்தார்கள்.

“பௌத்த சமயத்தையும்  Zhong Yong கோட்பாட்டையும் நம்புகின்றவர்களுக்காக, நாம் ஒற்றுமையான அல்லது Zhong Yong சமூகத்தை உருவாக்குவோம்,” என அவர் நஜிப் சொன்ன போதும் பலத்த கைதட்டல் எழுந்தது.

‘உருமாற்றத்துக்கான வாய்ப்பை நழுவ விட வேண்டாம்.’

நாட்டில் ‘பெரிய மாற்றங்களை” கொண்டு வர அரசாங்கத்துக்கு அந்த ஒற்றுமை அவசியம் என்றும் பிரதமர் சொன்னார்.

“அது தான் மண்டரின் மொழியில்  ‘zhuan’ என அழைக்கப்படும் உருமாற்றக் கோட்பாடு ஆகும். நாம் அதனை செய்தால் எல்லா இனங்களும் நன்மையடையும்,” என வலியுறுத்திய அவர், அந்த முயற்சியை ஆதரிக்குமாறு கூட்டத்தினரைக் கேட்டுக் கொண்டார்.

“அந்த வாய்ப்பு நம்மை விட்டு நழுவிப் போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 2020ல் நாட்டை வளர்ச்சி அடைந்த நாடாக நமது நாட்டை உயர்த்தும் மலேசியத் தலைமுறையாக நாம் விளங்குவோம்,” என்றார் நஜிப்.

கடந்த மூன்று ஆண்டுகளில் இரண்டாவது முறையாக அங்கு வந்துள்ளதாக குறிப்பிட்ட அவர், சாலை ஒன்றை நிர்மாணிப்பதற்கு கோயில், ஒதுக்கீடு கோரியுள்ளதாகச் சொன்னார்.

“அந்த ரெவரண்ட் இப்போது என்ன கேட்டார் ? சாலை ஒன்றைக் கோரினாரா ? நிச்சயம் நான் ஒதுக்கீடுகளை வழங்குவேன்.”

“ஒத்துக்கீட்டுக்கான வேண்டுகோளை நான் அங்கீகரிப்பேன். ஏனெனில் ரெவரண்ட் என்னிடம் மிக நல்ல முறையில் நடந்து கொள்கிறார். அதனால் நான் அவரிடம் நன்றாக நடந்து கொள்வேன்,” என்றார் நஜிப்.