இஸ்லாம், மலாய்க்காரர்கள், மலாய் ஆட்சியாளர்கள் ஆகியவற்றைத் தற்காப்பதற்கான போராட்டம் ஜிஹாட் அல்லது புனிதப் போர் என இன்று மாலை நிகழ்த்திய உணர்ச்சிப்பூர்வமான உரை ஒன்றில் பேராக் முப்தி ஹாருஸ்ஸானி ஸாக்காரியா பிரகடனம் செய்துள்ளார்.
“எப்போதும் ஜிஹாட்-டை நடத்துமாறு முஸ்லிம் உம்மா கேட்டுக் கொள்ளப்படுகிறது. ஜிஹாட் ஒரு கடமையாகும்”, என அவர் இன்று மலாய்-இஸ்லாம் ஆதரவு அரசு சாரா அமைப்பான ஜாத்தி ஏற்பாடு செய்த கூட்டத்தைத் தொடக்கி வைத்து ஆற்றிய உரையில் கூறினார்.
மலாய்க்காரர்கள் பொருளாதார ரீதியில் பலவீனமாக இருப்பதாலும் அரசர் அமைப்பு முறை அவமரியாதைக்கு உட்படுத்தப்படுவதாலும் இஸ்லாமும் கூட அவமானப்படுத்தப்படுவதாலும் அது முன்னைக் காட்டிலும் இப்போது உண்மையாகி இருக்கிறது என்றும் ஹாருஸ்ஸானி விளக்கினார்.
“மக்கள் அமைதியாக இருக்கின்றனர். சிலர் கூட அதனை ஏற்றுக் கொள்கின்றனர்… அதனால் நாம் நமது சமயத்தைத் தற்காக்க கடமைப்பட்டுள்ளோம்”, என அவர் கூறினார்.
.