Himpunan Hijau பேரணியில் சேர வேண்டாம் என அரசு ஊழியர்களுக்கு அறிவுரை

குவாந்தானில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்படும் Himpunan Hijau என்னும் பசுமைப் பேரணியில் பாகாங்கில் உள்ள அரசாங்க ஊழியர்கள் பங்கு கொள்ளக் கூடாது.

அவர்கள் அதற்குப் பதில் தாங்கள் எதிர்நோக்கும் பிரச்னைகளை தீர்த்துக் கொள்வதற்கு சரியான வழிகளைப் பின்பற்ற வேண்டும் என மாநிலச் செயலாளர் முகமட் சபியான் இஸ்மாயில் கூறினார்.

“அவசியம் ஏற்பட்டால் அவர்கள் பிரச்னைகளை விவாதிப்பதற்கு என்னைச் சந்திக்கலாம்,” என்று அவர் குவாந்தானில் நிருபர்களிடம் கூறினார்.

லினாஸ் அரிய மண் தொழில் கூடம் அமைக்கப்படுவதை ஆட்சேபித்து குவாந்தான் நகராட்சி மன்றத் திடலில் Himpunan Hijau 2.0 நடத்தப்படுகிறது

குவாந்தானுக்கு அருகில் உள்ள கெபெங்கில் அந்தத் தொழில் கூடம் கட்டப்படுவதைக் கண்காணிப்பதற்கு சுயேச்சைப் பிரிவு ஒன்று அமைக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

தொழில் நிபுணத்துவ அமைப்புக்கள் விதித்த நிபந்தனைகளும் தரங்களும் பூர்த்தி செய்யப்படுவதை அந்தப் பிரிவு உறுதி செய்யும் என அது தெரிவித்தது.

பெர்னாமா