“பதில் அளிக்குமாறு உள்துறை அமைச்சரைக் கட்டாயப்படுத்துவதற்கு ஒருவர் நீதி மன்றம் செல்ல வேண்டும் என்ற நிலை வெட்கக்கேடானது. அது அகங்காரம் இல்லையா ?”
HRP கட்சியை ஏற்றுக் கொள்வதற்கு அல்லது நிராகரிப்பதற்கு உள்துறை அமைச்சருக்கு 14 நாட்கள் காலக் கெடு
விஜய்47: HRP என்ற மனித உரிமைக் கட்சி இன்னும் பிரச்னைகளிலிருந்து விடுபடவில்லை. நீதிமன்றம் குறிப்பிட்டுள்ள கால கட்டத்துக்குள் அமைச்சர் மிகவும் தந்திரமாக அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு விட்டதாகச் சொல்லி விடுவார்.
பின்னர் அந்த விவகாரம் அத்துடன் முடிந்து விடும். ஒரு கட்சியின் பதிவு மீது அமைச்சரது முடிவே இறுதியானது, அதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்காட முடியாது எனச் சட்டம் கூறுவதாக நான் நினைக்கிறேன். நான் சொல்வது தவறாகவும் இருக்கலாம்.
பையுவன்ஷெங்: இந்த அரசாங்கத்துக்கு ஆளுவதற்கான ஆற்றலை இழந்து விட்டது என நான் கருதுகிறேன். இது போன்ற ஒரு சாதாரண விஷயத்துக்கு- தனது வேலையைச் செய்யுமாறு அரசாங்கத்துக்கு ‘உத்தரவிடுவதற்கு’ நீதிமன்றம் ஒன்று நமக்குத் தேவைப்படுகிறது. வெட்கமாக இருக்கிறது.
கங்காரு: பதில் அளிக்குமாறு உள்துறை அமைச்சரைக் கட்டாயப்படுத்துவதற்கு ஒருவர் நீதி மன்றம் செல்ல வேண்டும் என்ற நிலை வெட்கக்கேடானது. அது அகங்காரம் இல்லையா ?
அடையாளம் இல்லாதவன்_3fc4: இந்த உள்துறை அமைச்சர் இந்த நாட்டின் சட்டங்களைப் பின்பற்றுவதே இல்லை. அவர், தம்மைச் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர் என எண்ணிக் கொண்டிருக்கிறார். நீதிமன்றம் என்ன சொல்கிறது என்பதைப் பற்றி அவருக்கு அக்கறையே இல்லை.
தாம் உள்துறை அமைச்சர் பதவியை வகிப்பதால் வழக்குத் தொடரப்படுவதிலிருந்து தமக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக அவர் கருதுகிறார். அதனால் அவர் தமது விருப்பம் போல் செயல்படுகிறார். அவர் அம்னோபுத்ராக்களைச் சார்ந்தவர் என்பதில் ஐயமே இல்லை. ஏனெனில் அவர்கள் வைத்தது தான் சட்டம்.
மலேசிய இனம்: HRP நிச்சயம் பதிவு செய்யப்பட மாட்டாது. காரணம் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட், பெர்க்காசாவைக்கு இருப்பதைப் போன்று அதன் புரவலர் அல்ல.
மொஹைதீன்: பெர்க்காசாவுக்கு ஒரு சில நாட்களில் பிஎன் அங்கீகாரம் வழங்கும் போது HRP-யை அது ஏன் அங்கீகரிக்க முடியவில்லை என்பதை ஜீரணிப்பது மிகவும் சிரமமாக உள்ளது.
புத்ராஜெயாவை பக்காத்தான் ராக்யாட் கைப்பற்றினால் சில நாட்களில் HRP அங்கீகரிக்கப்படும் என நான் கருதுகிறேன். காரணம் அது அனைவருடைய உரிமைகளையும் திறந்த மனதுடன் மதிப்பதாகத் தெரிகிறது.
சோலாரிஸ்: HRP கட்சியின் விண்ணப்பத்தைப் பரிசீலிப்பது என்ன அவ்வளவு சிரமமா ?