“நேர்மையற்ற அம்னோவை அதற்கு இணையான நேர்மையற்ற தலைவர் போது வழி நடத்தும் போது அதன் குற்றங்களை ஆராய நிச்சயம் அவர் விரும்ப மாட்டார்.”
சபா ஆர்சிஐ பற்றி ‘இன்னும் பரிசீலிக்கப்படுகிறது’ என்கிறார் நஜிப்
பெர்ட் டான்: பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் சபா பயனத்தை முடித்துக் கொண்ட பின்னர் அந்த மாநிலத் தலைவர்கள், வாக்குகளைப் பெறுவதற்காக குடியுரிமை வழங்கப்பட்டதாக் கூறப்படுவது மீது சபா ஆர்சிஐ (அரச விசாரணை ஆணையம்) அமைக்கப்படுவது நிச்சயம் என தெரிவித்தது எப்படித் தவறாகிப் போனது ?
இப்போது நஜிப் அது இன்னும் பரிசீலினையில் இருப்பதாகக் கூறுவது முற்றிலும் வேறு விதமாக இருக்கிறது. நஜிப்பின் உதவியாளர்கள் அவர் சொல்வதிலிருந்து வேறுபடும் போது நஜிப் தலைமைத்துவத்தை என்னவென்று சொல்வது ?
ஆர்சிஐ அமைக்கப்படா விட்டால் தங்கள் செல்வாக்குச் சரிந்து விடும் என அஞ்சிய மாநிலத் தலைவர்கள் பிரதமரிடமிருந்து பதிலைக் கோரும் பொருட்டு முன் கூட்டியே அதனைச் சொல்லி விட்டார்களா ?
பார்வையாளன்: கடந்த தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கு சாத்தியமான எல்லா நேர்மையற்ற வழிகளையும் அம்னோ பயன்படுத்தியதை நாம் அறிந்துள்ளோம். (எடுத்துக்காட்டுக்கு, எதிர்க்கட்சிகள் மீது அவதூறு சொல்வது, தில்லுமுல்லு, ஆவி வாக்காளர்கள், அஞ்சல் வாக்குகள்)
நேர்மையற்ற அம்னோவை அதற்கு இணையான நேர்மையற்ற தலைவர் போது வழி நடத்தும் போது அதன் குற்றங்களையும் மோசடிகளையும் ஆராய்ந்து அதனை இக்கட்டான சூழ்நிலைக்கு கொண்டு செல்ல அவர் விரும்ப மாட்டார்.
ஆர்சிஐ-யை அமைப்பதின் மூலம் அந்த அடையாளக் கார்டு திட்டத்துக்கு ‘மூளை’ எனக் கருதப்படும் மகாதீரை நஜிப் இழுத்து விட்டால் மகாதீர், நஜிப் அலமாரியில் உள்ள “போர்ட் டிக்சன்’, ‘அல்தான்துயா’, ‘ஸ்கார்ப்பியோன்’ போன்ற எலும்புக் கூடுகளை அம்பலப்படுத்துவதின் மூலம் பதிலடி கொடுக்கக் கூடும்.
நஜிப், தியோ பெங் ஹாக் விஷயத்தில் செய்ததைப் போல சபா ஆர்சிஐ விவகாரத்திலும் அக்கறை கொண்டிருப்பதாகக் காட்டிக் கொண்டு அம்னோவின் நேர்மையற்ற சட்டவிரோத மோசடிகள் வெளியில் வராமல் இருக்க புதிய வழிகளைக் கண்டு பிடிக்க முயலுவார் என எதிர்பார்க்கலாம்.
சரவாக் டயாக்: கடந்த வாரம் சபாவுக்கு வரும் போது ஆர்சிஐ-யை அமைப்பது பற்றி பிபிஎஸ் (Parti Bersatu Sabah), அப்கோ (United Pasok Momogun Kadazandusun Murut Organisation), பிபிஆர்எஸ் (Parti Bersatu Rakyat Sabah), ஏன் சபா அம்னோவும் கூட சபா மக்களிடம் கூறியுள்ளன.
ஆகவே பிபிஎஸ், அப்கோ, பிபிஆர்எஸ் குறிப்பிட்டுள்ளது போல ஆர்சிஐ-யை அமைப்பதற்கு கூட்டரசு அமைச்சரவை ஒப்புக் கொண்டுள்ளதான் உண்மை. இப்போது நஜிப் அவற்றுக்குத் துரோகம் செய்து விட்டார். அதனால் அவை இப்போது வெட்கப்படுத்தப்பட்டு, களங்கப்படுத்தப்பட்டுள்ளன.
அல்லது சபா மக்களிடம் பிபிஎஸ், அப்கோ, பிபிஆர்எஸ், சபா அம்னோ பொய் சொல்கின்றனவா ?
உங்கள் அடிச்சுவட்டில்: நஜிப் அவர்களே உங்கள் நிர்வாகம் முறையற்றதாகவும் குழப்பமாகவும் இருக்கிறது. உண்மையில் ஆர்சிஐ குறித்து இன்னும் பரிசீலிக்கப்படுகிறது என்றால் உண்மையில்லாத அந்த அறிக்கைகளுக்காக அல்லது அறிவிப்புக்களுக்காக அந்த அரை வேக்காடு சபா அரசியல்வாதிகள் கண்டிக்கப்பட வேண்டும்.
அதே வேளையில் ஆர்சிஐ அமைப்பு மீது முடிவு செய்யப்பட்டு “நடைமுறையில் அமைச்சரவையாகவும் மலேசியப் பிரதமராகவும்” முறையே செயல்படும் பெர்க்காசாவும் மகாதீரும் பச்சைக் கொடி காட்டுவதற்காக நஜிப் காத்திருக்கிறாரா ?
அன்புள்ள பிரதமர் அவர்களே, மலேசியாகினியில் வரும் தலைப்புச் செய்திகள் எண்ணிக்கையை பார்க்கும் போது உண்மையில் யார் பிரதமர் என்பது குறித்து நீங்கள் அவசியம் கவலைப்பட வேண்டும்.