மலேசிய சோசலிசக் கட்சி (PSM), ஜொகூர் நூசா ஜெயா கிளையின் ஏற்பாட்டில் “ஜொகூர் மக்களே, ஒன்றிணைவோம்! பாரிசான் கூட்டணிக் கட்சிகளைப் புறக்கணிப்போம்!”எனும் கருப்பொருளுடன் ‘மக்கள் படும் பாடு’ குறுந்தட்டு வெளியீடும் நட்புறவு விருந்தும் (25.02.2012-சனிக்கிழமை) இன்று மாலை மணி 7 தொடக்கம் இரவு 10 வரை, மெய் டு யிங் பிங் உணவகம், தாமான் யுனிவர்சிட்டி ஸ்போர்ட்ஸ் கிளப், ஸ்கூடாய், ஜொகூர் எனும் முகவரியில் நடைபெறவுள்ளது.
‘மக்கள் படும் பாடு’ எனும் இந்தக் குறுந்தட்டில் 10 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. கடந்த 54 ஆண்டுகளாக, பாரிசான் ஆட்சியில் மலேசிய மக்கள் அன்றாட வாழ்க்கையில் எதிர்நோக்கும் பிரச்சனைகள் குறித்து , திரைப்படப் பாடல்கள் மெட்டில் எழுதப்பட்டுள்ளன. அடுத்தப் பொதுத்தேர்தலை எதிர்பார்த்திருக்கும் இத்தருணத்தில், மக்கள் தாங்கள் எதிர்நோக்கும் பிரச்னைகளை ஆளும் வர்க்கத்திற்குத் தெரிவிக்க வேண்டிய காலம் கணிந்துவிட்டது.
‘ஜொகூர் மக்களே, ஒன்றிணைவோம்! பாரிசான் கூட்டணிக் கட்சிகளைப் புறக்கணிப்போம்!!’ எனும் கருப்பொருளுடன் இந்நிகழ்வு ஏற்பாடாகியுள்ளது. நிகழ்வில் சிறப்புரையாற்ற, பி.எஸ்.எம். கட்சியின் துணைத் தலைவர், சகோதரி மு.சரஸ்வதி அவர்கள் வருகைபுரியவுள்ளார்.
பாடல் வரிகளை எழுதி, பாடியுள்ள தோழர் சேகர் அவர்களும் நிகழ்வில் கலந்துகொண்டு பாடல்கள் பாடவுள்ளார். மேலும், நிகழ்வில் ஒரு குறுநாடகமும் இசை நிகழ்ச்சியும் (குறுந்தட்டில் இடம்பெற்றுள்ள பாடல்கள்) நடைபெறும்.
எனவே, ஜொகூர் வாழ் இந்தியர்கள் இந்நிகழ்வுக்கு ஆதரவு அளிக்க கேட்டுக்கொள்கிறோம். மேலதிக விவரங்களுக்கும் மற்றும் நுழைவுச் சீட்டு (40 ரிங்கிட் – குறுந்தட்டு மற்றும் உணவு அடக்கம்) வாங்க விரும்புவோர், தோழர் மோகன் 017 7540597 அல்லது தோழர் சில்வராஜாவை 0167334469 தொடர்புகொள்ளவும்.