ஏஜி,மூசாமீது நடுவர் மன்றம் அமைக்கும் அவசரத் தீர்மானம் நிராகரிப்பு

சட்டத்துறைத் தலைவர் (ஏஜி) அப்துல் கனி பட்டேய்ல், முன்னாள் இன்ஸ்பெக்டர்-ஜெனரல் மூசா ஹசான் ஆகியோர் பற்றிக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை விசாரிக்க நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று  கோரிக்கை விடுக்கும் அவசரத் தீர்மானத்தை மக்களவைத் தலைவர் நிராகரித்தார்.

சுபாங் எம்பி ஆர்.சிவராசா (பிகேஆர்),பதிவு செய்த அத்தீர்மானம் திட்டவட்டமாக எதையும் குறிப்பிடவில்லை என்பதாலும் அது நிலை ஆணை 23(1)(i)-க்கு முரணானது என்பதாலும் புறந்தள்ளப்பட்டது. அவ்வாணையின்படி உறுதிப்படுத்தப்பட முடியாத செய்தி அறிக்கைகளின் அடிப்படையில் கேள்விகள் எழுப்ப முடியாது.

சிவராசா பொதுநலன் சம்பந்தப்பட்ட விவகாரங்களை விவாதிக்க இடமளிக்கும் நிலை ஆணைகள் 18(1), 18(2)-இன்கீழ் அத்தீர்மானத்தைப் பதிவு செய்திருந்தார்.

TAGS: