குவாந்தான் நாடாளுமன்றத் தொகுதியில் 3950வாக்காளர்கள் இராணுவ, போலீஸ் வாக்காளர்களாக மாற்றப்பட்டிருப்பதாக குவாந்தான் எம்பி பவுசியா சாலே கூறுகிறார்.
இன்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பவிசியா, வாக்காளர்கள் அனைவருமே 30 வயது அல்லது அதற்கும் மேற்பட்டவர்கள் என்பதால் அதைப் புரிந்துகொள்ள முடியவில்லை என்றார்.
“30 வயதுக்குமேல் இராணுவத்தில் அல்லது போலீசில் சேர முடியாது.ஆனால், புதிதாக அஞ்சல் வாக்காளர்களாக மாற்றப்பட்டவர்களில் சிலருக்கு 60 வயதாகிறது”, என்றாரவர்.
அவர்களின் பெயர்கள் பிரதான வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டு அஞ்சல் வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கிறது என்று பவுசியா கூறினார்.