“என்எப்சி எளிய கடனிலிருந்து இயக்குநர்கள் 12 மில்லியன் ரிங்கிட்டை உறிஞ்சினர்”

என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவனத்தின் இயக்குநர்கள் அரசாங்கம் வழங்கிய 250 மில்லியன் ரிங்கிட் எளிய கடனிலிருந்து சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட ஒரு நிறுவனத்தின் மூலம் உறிஞ்சியதாக டிஏபி இன்று கூறிக் கொண்டுள்ளது.

Global Biofuture என்ற நிறுவனத்துக்கு மகளிர், சமூக, மேம்பாட்டு அமைச்சர் ஷாரிஸாட் அப்துல் ஜலிலின் கணவரும் அவருடைய புதல்வர்களும் 12 மில்லியன் ரிங்கிட் கொடுக்க வேண்டியுள்ளதாக பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி டோனி புவா தெரிவித்துள்ளார்.

அந்த 12 மில்லியன் ரிங்கிட் அந்த எளிய கடனைக் கொண்டு அமைக்கப்பட்ட National Meat and Livestock Sdn Bhd, Real Food Company Sdn Bhd, and Meatworks (Singapore) Ptd Ltd ஆகியவை உட்பட ஷாரிஸாட் குடும்பத்தினர் நடத்தும் நிறுவனக்  குழாம் வழியாக பெறப்பட்டதாக அவர் கூறிக் கொண்டார்.

“2011ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி வரைக்குமான சிங்கப்பூர் கணக்கியல், நிறுவன கட்டுப்பாட்டு அமைப்பில் கிடைக்கும் தணிக்கை செய்யப்பட்ட அண்மையக் கணக்கின்படி என்எப்சி இயக்குநர்கள் 4,975,415 சிங்கப்பூர் டாலரை (.11.98 million ரிங்கிட்) கொடுக்க வேண்டியுள்ளது.

.