அந்நியர்களைக் கவரும் நோக்கம் கொண்ட MM2H எனப்படும் ‘மலேசியா என் இரண்டாவது இல்லம்’ என்னும் திட்டம் தோல்வி கண்டதற்கு “சாலை ஆர்ப்பாட்டங்கள்” காரணம் எனக் கூறிய சுற்றுப் பயண அமைச்சர் இங் யென் யென்- னை சிலாங்கூர் ஆட்சி மன்ற உறுப்பினர் எலிசபத் வோங் சாடியிருக்கிறார்.
‘மலேசியா என் இரண்டாவது இல்லம்’ தோல்வி கண்டதற்கு அமைதியான பொதுக் கூட்டங்கள் மீது அவர் பழி போட்டிருப்பது ஏமாற்றமளிக்கிறது,” என வோங் இன்று விடுத்த அறிக்கை கூறியது.
“தமது அமைச்சின் தோல்விக்கு அமைச்சர் யார் மீதாவது குற்றம் சாட்ட வேண்டும் என்றாலும் அவரது அறிக்கை அவரையும் அரசாங்கத்தையுமே அவமானப்படுத்துகிறது.”
உலகம் முழுவதும் ஜனநாயகமும் அதனுடன் இணைந்த அமைதியான எதிர்ப்புப் பொதுக் கூட்டங்களும் ஏற்றுக் கொள்ளப்பட்ட பண்புகளாகி விட்டன என்பதை வோங் அமைச்சருக்கு நினைவுபடுத்தினார்.
‘மலேசியா என் இரண்டாவது இல்லம்’ தோல்வி காண்பதற்கு குடிநுழைவு நடைமுறைகளில் காணப்படும் சிரமங்களைக் குறைக்க அரசாங்கம் தவறியதும் அந்தத் திட்டம் கவர்ச்சியாக இல்லாததாதும் உண்மையான சலுகைகளை ஏதும் வழங்காததாதும் காரணங்கள் என்றார் அவர்.
இங், அந்தத் தோல்விக்கான உண்மையான காரணங்களைக் கண்டறிய இங் விரிவான ஆய்வை மேற்கொள்ள வேண்டும் என வோங் தெரிவித்தார்.
அந்தத் திட்டத்தை விளம்பரப்படுத்துவதற்கு அமைச்சு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தோல்வி கண்டதற்கு சாலை ஆர்ப்பாட்டங்கள் முக்கியக் காரணம் என டிஏபி செபுத்தே உறுப்பினர் தெரெசா கோக் தொடுத்த கேள்விக்குப் பதில் அளித்த போது இங் கூறினார்.