பார்டி பாரிசான் ஜும்மா இஸ்லாமியா செமலேசியா (பெர்ஜாசா) அடுத்த பொதுத் தேர்தலில் நாட்டின் பல மாநிலங்களில் குறிப்பாக கிளந்தானிலும் கெடாவிலும் 40-50 நாடாளுமன்றத் தொகுதிகளில் களம் இறங்கப் போவதாக இன்று அறிவித்தது.
20 இடங்களிலாவது வெற்றிபெற முடியும் என்று கட்சி நம்பிக்கை கொண்டிருப்பதாக 13வது பொதுத் தேர்தலுக்கான அதன் செயல்முறை இயக்குனர் ஹஷிம் கரிம் செய்தியாளர் கூட்டமொன்றில் கூறினார்.
1978-இல் 5,000 உறுப்பினர்களுடன் தோற்றுவிக்கப்பட்ட பெர்ஜாசா, அந்தப் பக்கமும் சேராமல் இந்தப் பக்கமும் சேராமல் மதில்மேல் பூனையாக உள்ள வாக்காளர்கள் மீது கவனம் செலுத்துவதாகவும் அவர்கள் கட்சியில் உறுப்பினராவதை வரவேற்கிறது என்றும் ஹஷிம் கூறினார்.
“பெர்ஜாசா வாக்காளர்களைக் குறிப்பாக இளைஞர்களையும் நிபுணர்களையும் அணுக டிவிட்டர், முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களை முழுமையாக பயன்படுத்திக்கொள்ளும்”, என்றாரவர்.