புக்கிட் மேராவில் அளவுக்கு மிஞ்சிய கதிரியக்கக் கசிவுகள் மீது அவசரத் தீர்மானம்

புக்கிட் மேராவில் கைவிடப்பட்ட அரிய மண் தொழில் கூடத்தைச் சுற்றிலும் அதன் கழிவுப் பொருட்கள் நிரந்தரமாகக் கொட்டப்பட்டுள்ள ஈப்போ புக்கிட் கெலடாங்கிலும் இன்னும் மித மிஞ்சிய அணுக் கதிரியக்கக் கசிவுகள் இருப்பதாக கூறப்படுவது மீது மக்களவையில் அவசரத் தீர்மானம் ஒன்று சமர்பிக்கப்பட்டுள்ளது.

SMSL என்ற லினாஸிடமிருந்து மலேசியாவைக் காப்பாற்றுங்கள் என்ற சுற்றுச்சூழல் அமைப்பின் ஆய்வு முடிவுகளை மேற்கோள் காட்டிய டிஏபி பத்துக் காஜா உறுப்பினர் அந்த முடிவுகள் AELB என்ற அணு எரிபொருள் அனுமதி வாரிய உறுதி மொழிகளுக்கு மாறாக இருப்பதாக சொன்னார்.

அந்தத் தீர்மானத்தை சமர்பித்துப் பேசிய போங், கிட்டத்தட்ட 10,000 மக்களுடைய வாழ்க்கை சம்பந்தப்பட்டுள்ளதால் அந்தப் பிரச்னை குறிப்பிடத்தக்கது. பொது மக்களுக்கு முக்கியமானது, அவசரமானது என்றார்.

SMSL குவாந்தானில் அமைக்கப்படும் லினாஸ் அரிய மண் தொழில் கூடத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வருகிறது.  18 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட மிட்சுபிஷி அரிய மண் தொழில் கூடத்தில் கதிரியக்கக் கசிவுகள் இன்னும் அபாயகரமான அளவிலேயே இருப்பதாக அது கூறிக் கொண்டுள்ளது.

அந்த அமைப்பு கடந்த வார இறுதியில் பேராக்கில் உள்ள அந்தத் தொழில் கூடம் அமைந்த இடத்தில் சோதனைகளை மேற்கொண்டது.

அந்தத் தொழில் கூடத்துக்கு அருகில் மணிக்கு 0.19 microsievert ( microsievert per hour ) ஆகவும் அதன் கழிவுகள் கொட்டப்பட்ட இடத்தில் மணிக்கு 0.2 microsievert-ஆகவும் கதிரியக்கப் பதிவுகள் இருப்பதாக SMSL தலைவர் தான் பூன் தீட் கூறினார்.

அந்த இரண்டு பதிவுகளையும் ஆண்டு அளவிலான கதிரியக்க கசிவுகளாக கூட்டினால் அது ஆண்டு ஒன்றுக்கு AELB தெரிவித்த பாதுகாப்பான அளவான 1 milisievert-டையும் தாண்டி விடுகிறது.

புக்கிட் கெலாடாங் கழிவுப் பொருள் குவிப்பு மய்யம் முற்றாக சீல் (மூடப்பட்ட) பின்னர் புக்கிட் மேரா அரிய மண் தொழில் கூடம் அமைந்துள்ள இடம் பொதுப் பூங்காவாக மாற்றப்படுவதற்குப் போதுமான அளவுக்குப் பாதுகாப்பானதாக இருக்கும் என மார்ச் எட்டாம் தேதி வாக்குறுதி அளித்தது. அடுத்த ஆண்டு அது பொதுப் பூங்கா அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த இடத்திலிருந்து 10 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் அன்றாட, வார, மாத அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட கதிரியக்க கண்காணிப்பின் அடிப்படையில் AELB அவ்வாறு கூறியது.

“அந்தத் தொழில் கூடம் இடிக்கப்பட்டது, அணுக் கதிரியக்கக் கசிவுகள் அகற்றப்பட்டது மீது 2011ம் ஆண்டு ஜுன் மாதம் 21ம் தேதி அளித்த எழுத்துப்பூர்வமான பதிலில் 2006ம் ஆண்டு தொடக்கம் அந்த இடம் கதிரியக்கத் தூய்மைக் கேட்டிலிருந்து விடுபட்டுள்ளதாக அறிவியல் தொழில்நுட்ப, புத்தாக்க அமைச்சர் பிரகடனம் செய்தார்,” என போங் கூறினார்.

ஆகவே பாப்பான், லாஹாட், குறிப்பாக கம்போங் பாரு, புக்கிட் மேரா, மெங்களம்பு, பூசிங் உண்மையிலேயே தூய்மைக்கேட்டிலிருந்து விடுபட்டுள்ளதா என அவர் வினவினார்.
 
அந்த இடம் தூய்மைப்படுத்தப்படும் போதும் அதன் கழிவுப் பொருட்கள் அகற்றப்படும் போதும் குடியிருப்பாளர்களுடைய பாதுகாப்பையும் ஆரோக்கியத்தையும் உறுதி செய்யும் பொருட்டு உத்தரவாதம் கொடுப்பதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது ?” என்றும் போங் வினவினார்.