ஆர்பிகே, நஜிப் இருவருக்கும் எதிராக வாதம் செய்ய அன்வார் தயார்

ஒரே நேரத்தில் வலைப்பதிவர் ராஜா பெட்ரா கமருடின், பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் ஆகிய இருவருக்கும் எதிராக வாதம் செய்ய மாற்றரசுக்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் தயாராகவுள்ளார்.

“நஜிப், ஆர்பிகே, நான் ஆகிய மூவரும் கலந்துகொள்ளும் பொதுவிவாதத்துக்கு ஏற்பாடு செய்ய ஜூலியன் அஸாஞ்சே முன்வந்துள்ளார். நானும் சரி என்று சொல்லி விட்டேன்.” பெர்மாத்தாங் பாவ் எம்பியான அன்வார், இன்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது இத்தகவலைத் தெரிவித்தார்.

விக்கிலீக்ஸ் நிறுவனரான அஸாஞ்சே முதலில் தம்முடன் டிவிட்டரில் ஒரு நேர்காணல் நடத்தத்தான் விரும்பினார் என்றும் ஆனால் ஆர்பிகே புகுந்து குளறுபடி பண்ணினார், நஜிப்பும் அவருக்கு ஆதரவு தெரிவித்தார் என்று அன்வார் குறிப்பிட்டார்.

இதைக் கண்ட அஸாஞ்சே, மூவரும் கலந்துகொள்ள பொதுவிவாத மேடை ஒன்றை ஏற்பாடு செய்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்தார்.

இருவரையும் எதிர்த்து வாதம்செய்ய தாம் தயார் என்று அன்வார் அறிவித்து விட்டார். ஆனால், ஆர்பிகே-யும் நஜிப்பும் இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை.