வாக்காளர் பட்டியலில் இசி-யின் மோசடிகள்: பக்காத்தான் அம்பலம்

வாக்காளர் பட்டியலில் தேர்தல் ஆணையம் செய்யும் ‘மாபெரும் மோசடி வேலைகளை’ பிகேஆர் நடப்புத் தலைவர் அம்பலப்படுத்தினார்.

இன்று, நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அன்வார் இப்ராகிம்,“அதை என்னால் நிரூபிக்க முடியும்”, என்றார்.

பின்னர் அவர், பூலாயில் ஏற்கனவே வாக்காளராக பதிவுசெய்யப்பட்ட ஒருவர்  இப்போது பெக்கானில் புதிய வேட்பாளராக பதிவு செய்யப்பட்டிருப்பதைக் காண்பிக்கும் அச்சிட்ட தாள் ஒன்றைச் செய்தியாளர்களிடம் காண்பித்தார்.

“ஒரே மாதிரியான விவரங்களை உள்ளீடு செய்தால் கணினி புறந்தள்ளி இருக்கும்.அதனால்,புதிதாக பதிவுசெய்யும்போது அடையாள அட்டை எண்களுக்குப் பின்னர் ஒரு சாய்வுக்கோடு (/)  போட்டு விடுகிறார்கள்”.

கோட்டைப் பார்த்து அதை ஒரு புதிய பெயர் என்று கணினி தீர்மானித்து விடுகிறது.

இப்படி இசி, அம்னோவுடன் உள்கூட்டு வைத்துக்கொண்டு ஒருவரையே பல தொகுதிகளில் வாக்காளராக பதிவு செய்து வருகிறது என்றவர் கூறினார்.