அம்னோ மகளிர் பிரிவினர் தற்போது நெருக்கடியில் சிக்கியிருக்கும் தங்கள் தலைவி பின்னால் அணி திரள வேண்டும் என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
அந்தப் பிரிவைச் சேர்ந்த சில தலைவிகள் ஷாரிஸாட் பதவி விலக் வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ள வேளையில் பிரதமர் அவ்வாறு கூறியுள்ளார்.
கடந்த வாரம் புத்ராஜெயாவில் தேசிய அம்னோ மகளிர் பிரிவு நிர்வாகக் குழு உறுப்பினர்களைச் சந்தித்த போது நஜிப் அவ்வாறு கேட்டுக் கொண்டதாக சிலாங்கூர் அம்னோ மகளிர் தலைவி ராஜா ரோப்பியா ராஜா அப்துல்லா கூறினார்.
அந்தச் சந்திப்பின் போது அம்னோ நிர்வாக எந்திரம் ஷாரிஸாட்டை விரும்புவதால் அம்னோ மகளிர் பிரிவைத் தொடர்ந்து வழி நடத்துமாறு ஷாரிஸாட்டை நஜிப் கேட்டுக் கொண்டார்.
“ஷாரிஸாட் எடுத்துள்ள பல முயற்சிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதில் Skuad Sayang என்ற பரிவு காட்டும் அணியும் அடங்கும்,” என ராஜா ரோப்பியா இன்று ஷா அலாமில் நிருபர்களிடம் கூறினார்.