நஜிப் நாளை தொடக்கம் பர்மாவுக்கு இரண்டு நாள் பயணத்தை மேற்கொள்கிறார்

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் நாளை தொடக்கம் பர்மாவுக்கு இரண்டு நாள் பயணத்தை மேற்கொள்கிறார்.

பர்மாவுக்கும் மலேசியாவுக்கும் இடையில் உறவுகளை மேலும் வலுப்படுத்துவது அவரது பயண நோக்கமாகும்.

2009ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பிரதமராகப் பொறுப்பேற்ற பின்னர் நஜிப் அந்த நாட்டுக்குச் செல்வது இதுவே முதன் முறையாகும்.

நஜிப்புடன் அவரது துணைவியார் ரோஸ்மா மான்சோரும் வெளியுறவு அமைச்சர் அனிபா அமானும் பல அமைச்சர்களும் துணை அமைச்சர்களும் செல்கின்றனர்.

அந்த விவரங்களை இன்று விஸ்மா புத்ரா வெளியிட்டது.

மலேசியாவுக்கும் பர்மாவுக்கும் இடையில் 1957ம் ஆண்டு அரசதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டன.

இரு நாடுகளுக்கும் இடையில் 2011ம் ஆண்டு 2.43 பில்லியன் ரிங்கிட் பெறும் வாணிகம் நடைபெற்றது. அந்த அளவு 2010ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 26.8 விழுக்காடு அதிகமாகும்.

இரு வழி வர்த்தக வாய்ப்புக்களை பெருக்குவதும் அவரது பயண நோக்கமாகும்.

பர்மியத் தலைநகர் Naypyitawவுக்கு முதலில் செல்லும் நஜிப் பர்மிய அதிபர் தியன் செய்ன் -னை சந்திப்பார்.

-பெர்னாமா