அண்மையில் ஐ.நா மனித உரிமை ஆணையக் கூட்டத் தொடரில் அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட இலங்கைக்கு எதிரான தீர்மானம் 24 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.
இலங்கையில் 2009-ஆம் ஆண்டு மே மாதம் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின்போது மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றாக எழுந்த குற்றச்சாட்டுகளை அடுத்து இலங்கை அரசாங்கம் தனக்கு சாதகமான வகையில் நல்லிணக்க ஆணைக்குழுவொன்றை நிறுவி அதன் மூலம் விசாரணைகளை மேற்கொண்டது. ஆனால் காலங்கள் கடந்துவிட்ட சூழலில் எவ்வித நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொள்ளவில்லை. இச்சூழலில்தான் இலங்கை அரசால் விசாரணை செய்ய பணிக்கப்பட்ட ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும் வண்ணம் ஐநா மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்க அரசாங்கம் ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தது.
எனினும், மனித உரிமை ஆணையத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள அத்தீர்மானம் தமிழர்கள் நலனுக்கு சாதகமானதா? இல்லையா? என்ற வினா பலரிடையே எழுந்துள்ள இச்சூழலில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி. உருத்திரகுமரன் மற்றும் தமிழீழ உணர்வாளர்கள் சிலர் தொலைபேசி வாயிலாக செம்பருத்தி இணையத்திற்கு வழங்கிய சிறப்பு செவ்வி இங்கு இணைக்கப்பட்டுள்ளது.
காணொளியை பார்வையிட இங்கு அழுத்தவும் காணொளி 11.20 min
(அடுத்த கட்டமாக இத்தீர்மானம் குறித்து மலேசியாவிலுள்ள முக்கிய தலைவர்கள் மற்றும் தமிழீழ உணர்வாளர்களின் கருத்துக்கள் அடங்கிய காணொளி தொகுப்பு விரைவில் இணைக்கப்படவுள்ளது.)

























