கிட்டத்தட்ட 40 விழுக்காட்டினர் ஊடகப் பேராளர்கள்: அது பிரச்சார தந்திரம் இல்லையா ?

 “மெர்சி மலேசியா வழியாக அஜிஸ், உதவிப் பொருட்களை அனுப்பியிருக்கலாம். ஆனால் அது முடியாது. ஏனெனில் தொலைக்காட்சிகள் அதனை படம் பிடிக்க மாட்டா.”

 

 

 

 

சோமாலியாவுக்கு “எதிர்ப்பாளர்களை” இலவசமாக அழைத்துச் செல்ல அஜிஸ் முன் வருகிறார்

சக மலேசியன்: புத்ரா ஒரே மலேசியா மன்றத் தலைவர் அப்துல் அஜிஸ் அப்துல் ரஹிம் இறுதியில் வெளியில் வந்து தம்மைத் தற்காத்துக் கொண்டுள்ளார்.

சோமாலியாவுக்கு எதிர்க்கட்சிகளையும் செய்தி இணையத் தளங்களையும் இலவசமாக அழைத்துச் செல்வதாக அவர் ஏன் அபத்தமாக முன் வர வேண்டும்?  அந்த பயங்கர அனுபவத்துக்குப் பின்னர் அது என்ன பயனைத் தரப் போகிறது?

இராணுவ ஆதரவுக்கான உத்தரவாதம், போதுமான பாதுகாப்பு கவசங்கள் இல்லாமல் சரியான புத்தியுள்ள எந்த நிருபரும் தமது உயிரைப் பணயம் வைத்து போக மாட்டார். துப்பாக்கிக் குண்டுகள் துளைக்காத ஆடையை நீங்கள் அணிந்திருந்தால் கூட உங்கள் உயிருக்கு 100 விழுக்காடு உத்தரவாதம் அளிக்க முடியாது என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூட கூறியிருக்கிறார்.

விளம்பரத்துக்காக அந்த உதவிப் பயணம் மேற்கொள்ளப்படவில்லை என அஜிஸ் சொல்வது முற்றிலும் பொய் ஆகும்.

அச்சன்: புறப்படும் தினத்தன்று 74 ஊடகப் பேராளர்கள் விமான நிலையத்துக்கு வந்ததாகவும் ஆனால் அந்த இராணுவ விமானத்தில் 48 பேர் மட்டுமே பயணம் செய்ய முடியும் என்பதால் பலர் “அழுத முகத்துடன் வீடு திரும்பினர்” என்றும் அஜிஸ் கூறியிருக்கிறார்.

அஜிஸ் அவர்களே, இத்தகையப் பயணங்களுக்கு ஏற்பாடு செய்யும் முன்னர் எத்தனை பேர் அதில் கலந்து கொள்கின்றனர் என்பது அவசியம் தெரிந்திருக்க வேண்டும். அப்போதுதான் போக்குவரத்து ஏற்பாடுகளுக்கும் தங்குவதற்கான வசதிகளுக்கும் திட்டமிட முடியும்.

இது போர்ட்டிக்சனுக்கு மேற்கொள்ளப்படும் பிக்னிக் பயணம் அல்ல. முதலில் வருகின்றவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு எனக் கூறுவதற்கு.

போர்க் கினாலு: அது உண்மையில் பல தகவல்களைக் கொண்ட பேட்டியாகும். ஆனால் அது பல கேள்விகளை எழுப்பியுள்ளது:

1) இராணுவ விமானம் பயன்படுத்தப்பட்டதாக அஜிஸ் சொல்கிறார். மலேசியாவில் அரசு சாரா அமைப்புக்களுக்கு அத்தகைய வசதிகள் வழங்கப்படுகின்றனவா? அந்தப் பயணத்துக்கான செலவுகளில் எத்தனை விழுக்காடு அம்னோ கொடுத்தது? எத்தனை விழுக்காடு வரிப் பணம்?

2) அந்த உதவிப் பயணத்தில் சென்ற 48 பேரில் 18 பேர் ஊடகப் பேராளர்கள். அது “சிறியது” என அஜிஸ் கூறுகிறார். அப்படி என்றால் அளவுகோல் என்ன?

3) 74 ஊடக அமைப்புக்களிலிருந்து 18 பத்திரிக்கையாளர்கள் தேவு செய்யப்பட்டனர். அவர்களில் சிலர் “நட்புறவு” அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட அமைப்புக்கள் பட்டியலையும் நீக்கப்பட்ட ஊடகங்கள் பட்டியலையும் எங்களுக்குத் தர முடியுமா?

4) நீங்கள் பத்திரிக்கையாளர்களுக்கு இடம் கொடுக்க வேண்டுமானால் மற்றவர்களை நீக்கியிருக்க வேண்டும். அவர்கள் யார் என்பதை தெரிவிக்க முடியுமா?

5) மெர்சி மலேசியா, எல்லை இல்லாத மருத்துவ உதவி நிறுவனம். இஸ்லாமிக் மலேசியா போன்ற அமைப்புக்கள் வழி உதவியை அனுப்பினால் என்ன தவறு?

6) இது கேள்வி அல்ல. வெறும் கண்ணோட்டமே. புறப்படும் தினத்தன்று உங்களிடம் பயணிகள் இறுதிப்பட்டியல் இல்லை. “நட்புறவு”அடிப்படையில்” கட்சி நிமிடத்தில் நீங்கள் முடிவு செய்தீர்கள். இதுதான் வழக்கமா?

விஜய்47: அவர் இரண்டு விஷயங்களை தெளிவுபடுத்தினால் நல்லது. சோமாலியாவுக்குச் செல்ல விரும்பும் யாரையும் இலவசமாக அழைத்துச் செல்ல அவர் முன் வந்துள்ளார். அதற்கான நிதியை அவர் எங்கிருந்து பெறுவார்?

இரண்டாவதாக அந்த உதவிப் பயணத்தில் 48 பேர் சென்றனர். அவர்களில் 40 விழுக்காட்டினர் ஊடகப் பேராளர்கள். உண்மையான விகிதாச்சாரம் 18:30. அது 60 விழுக்காடு அல்லவா?

அந்த விகிதாச்சாரத்தில் அம்னோவின் பிரச்சார தந்திரம் தெரியவில்லையா?

ஜைனல்: நிதிகளில் எத்தனை விழுக்காடு சோமாலியர்களுக்குச் செல்கிறது? அல்லது சுய புராணம் பாடுகின்ற அரசியல்வாதிகளுக்கு கொடுப்பது போன்ற “நிர்வாகச் செலவுகளுக்கு” பெரும் பணம் செலவு செய்யப்படுகிறதா? புத்ரா ஒரே மலேசியா மன்றம் இராணுவ விமானத்தைப் பயன்படுத்துவதற்கு எப்படி அனுமதி கிடைத்தது?

மெர்சி மலேசியா, இஸ்லாமிக் மலேசியா போன்ற அமைப்புக்கள் பல ஆண்டுகளாக அங்கு இயங்கி வருகின்றன. அவற்றுக்கு நாம் ஆதரவு கொடுக்கக் கூடாது?

லவர் பாய்: இது 100 விழுக்காடு அரசியல் ஆதாய நோக்கத்தைக் கொண்டது. ஆனால் அது நடக்காது. ஏனெனில் அவர்களுடைய “உதவி” நடவடிக்கையை படம் பிடிப்பதற்கு தொலைக்காட்சிப் பேராளர்களோ அல்லது பெர்னாமா பேராளரோ அங்கு இருக்க மாட்டார்கள்.

TAGS: