குறித்த நேரத்தில் ரயில்களை ஒட்டுவதே முகமட் ஜின்-னின் வேலை

‘கேடிஎம் என்ற மலாயன் ரயில்வே ஆண்டுக்கு 130 மில்லியன் ரிங்கிட்டை இழந்து வருகிறது. அதன் ஊழியர்கள் தங்களது திறமையின்மையைத் தக்க வைத்துக் கொள்ள பிஎன்-னை ஆதரிக்கின்றனர்.

‘ரயில் நிலையங்களில் பிஎன் கொடிகள் பறக்க விடப்படுவதை கேடிஎம் தலைவர் அனுமதிக்கிறார்’

லோங்ஜாபார்: கேடிஎம் போன்ற அமைப்புகள் பாகுபாடு காட்டக் கூடாது. அரசியல் சார்பற்றதாக இயங்க வேண்டும். சேவை மனப்பான்மை வேண்டும். மறுபட்ட அரசியல் நம்பிக்கைகளை கொண்டுள்ள யாரையும் புறக்கணிக்காமல் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பணியாற்ற வேண்டும்.

எல்லாவற்றுக்கும் மேலாக கேடிஎம் நிதி நெருக்கடியை எதிர்நோக்குகிறது. அதன் தலைமை நிர்வாக அதிகாரி ஆண்டுதோறும் மாற்றப்படுகிறார். அது நஷ்டத்தில் ஒடுகிறது. குறித்த நேரத்தில் ரயில்கள் ஒடவில்லை. பயணிகள் அடிக்கடி புகார் கடிதங்களை எழுதுகின்றனர்.

உண்மையில் கேடிஎம் கழுத்தை பிரச்னைகள் நெருக்குகின்றன. ஆனால் அரசியல் சிந்தனையுள்ள அதன் தலைவர் தமது அரசியல் வாழ்வாதரத்துக்கு கேடிஎம்-மைப் பயன்படுத்த விரும்புகிறார்.

சுவாத்: கேடிஎம் ரயில் நிலையங்களில் பிஎன் கொடிகளைப் பறக்க விடுமாறு உத்தரவிட்டதாகத் தமக்கு நினைவில்லை என கேடிஎம் தலைவர் முகமட் ஜின் முகமட் கூறுகிறார். அது எந்த உண்மையையும் மெய்பிக்கப் போவதில்லை.

எல்லாவற்றுக்கும்  மேலாக போலீசார் தங்களுக்கு எதிராக புகார் தெரிவிக்கப்படும் போது  யாரையும் குத்தியதாக தங்களுக்கு நினைவில் இல்லை எனக் கூறலாமே.

அவர் உண்மையில் நேர்மையானவராக இருந்தால் எல்லாக் கட்சிக் கொடிகளும் அகற்றப்பட வேண்டும் என ஆணையிட வேண்டும்.

பெர்ட் தான்: தமது ரயில்களை குறித்த நேரத்தில் ஒட்டாத கேடிஎம் தலைவர் முகமட் ஜின் முதலில் நீக்கப்பட வேண்டும். ரயில்கள் அடிக்கடி பழுதடைந்து விடுகின்றன. மக்கள் கொடுக்கும் சம்பளத்துக்கு அவர் ஒழுங்காக வேலை செய்யாமல் அரசியலில் இறங்குகிறார்.

லிம் சொங் லியோங்: “நான் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. ஆனால் அவர்கள் கொடிகளைப் பறக்க விட விரும்பினால் பிரச்னை ஏதுமில்லை. ஆனால் எந்த அறிவிப்புக்களையும் மறைக்க வேண்டாம்,” என்கிறார் முகமட் ஜின்.

யார் அந்த அவர்கள் ? உங்கள் உத்தரவிடவில்லை என்றால் பிஎன் கொடிகளை பறக்க விடுவதற்கு அவர்களுக்குத் துணிச்சல் வருமா ?

ஒதுங்கி நிற்பவன்: கேடிஎம் பகுதிகளில் பிஎன் பிரச்சார ஊடகங்கள் காட்சிக்கு வைக்கப்படுவதற்கு கேடிஎம் தலைவர் அனுமதித்துள்ளது அவருக்கு ஏதோ உள் நோக்கம் இருப்பதைக் காட்டுகிறது.

அந்தப் பதவியில் தகுதியற்ற மக்களை வைத்திருப்பதால் ஏற்படுகின்ற விளைவுகளே அவை. நடப்பு அரசாங்கம் பல ஆண்டுகளாக அதனைத் தான் செய்து வருகிறது. அவர்களுக்கு தங்களது கடமைகளின் எல்லைகள் புரிவதே இல்லை.

முன்னாள்-wfw: கேடிஎம் ஆண்டுக்கு 130 மில்லியன் ரிங்கிட்டை இழந்து வருகிறது. அதன் ஊழியர்கள் தங்களது திறமையின்மையைத் தக்க வைத்துக் கொள்ள பிஎன்-னை ஆதரிக்கின்றனர். நாம் அத்தகைய நிலைக்கு கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக நாம் ஊக்கமூட்டி வந்துள்ளோம். அதனால் இது ஒன்றும் வியப்பில்லை.

டாக்: கேடிஎம் எல்லா ‘komuter’ இருக்கைகளிலும் பிஎன் கொடிகளை போர்த்த வேண்டும். பிஎன் சின்னத்தைப் பார்ப்பதற்குப் பதில் அதில் அமருவது நல்லது.