சிலாங்கூர் பிஎன் ‘Ops Kibar dan Santai’ இயக்கத்தைத் தொடங்கியுள்ளது

சிலாங்கூர் பாரிசான் நேசனல் இளைஞர்களுக்கு அணுக்கமாக இருக்கும் பொருட்டு நேற்றிரவு  ‘Ops Kibar dan Santai Orang Muda’ இயக்கத்தை அறிமுகம் செய்துள்ளது.

பொழுதுபோக்கு மாதிரியிலான நடவடிக்கைகளைக் கொண்ட அந்த வாராந்திரத் திட்டம் வரும் வெள்ளிக் கிழமை ஷா அலாமில் உள்ள சிலாங்கூர் அம்னோ கட்டிடத்தில் தொடக்கி வைக்கப்படும்.

அந்த  விவரங்களை அந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முகமட் ஜின் முகமட் இன்று வெளியிட்டார்.

“இசை, பண்பாடு, கவிதை ஆகிய துறைகளில் மாணவர்கள் தங்களது ஆற்றலை மெய்பிப்பதற்கு அந்த இயக்கம் வாய்ப்பளிக்கும்,” என அவர் அறிமுக நிகழ்வுக்குப் பின்னர்  நிருபர்களிடம் கூறினார்.

அந்த அறிமுக நிகழ்வின் போது 1980ம் ஆண்டுகளில் பிரபலமாகத் திகழ்ந்த பாடகரான Poe சில பாடல்களைப் பாடினார். முகமட் ஜின் கவிதை ஒன்றை வாசித்தார்.

பெர்னாமா