பிபிபி கூடுதலான உணவு விநியோக மய்யங்களைத் திறக்க எண்ணுகிறது

பிபிபி என்ற மக்கள் முற்போக்குக் கட்சி தனது ‘ உணவளிக்கும் திட்டம்: தேவைப்படுகின்றவர்களுக்கு உணவு’ என்னும் திட்டத்தின் கீழ் ஜோகூரிலும் கெடாவிலும் இன்னும் அதிகமான உணவு விநியோக மய்யங்களைத் திறக்க எண்ணியுள்ளது.

அத்தகைய முதலாவது மய்யம் கிள்ளான் தாமான்  செந்தோசாவில் மார்ச் மாதம் 4ம் தேதி தொடக்கி வைக்கப்பட்டதாக பிபிபி இளைஞர் தலைவர் ஹாரிட்ஸ் மோகன் கூறினார். அங்கு அன்றாடம் 100 உணவுப் பொட்டலங்கள் இலவசமாக விநியோகம் செய்யப்படுவதாக அவர் சொன்னார்.

“தெரிவு செய்யப்படும் பகுதிகளில் தேவைப்படுகின்றவர்களுக்கு நாங்கள் உணவுப் பொட்டலங்களை விநியோகம் செய்ய நடமாடும் வேன்களை பயன்படுத்துவோம்,” என்றும் அவர் இன்று கோலாலம்பூரில் பெர்னாமாவிடம் தெரிவித்தார்.

தேவைப்படுகின்றவர்களுக்கு காலை உணவும் இரவு உணவும் வழங்குவது பற்றியும் பிபிபி யோசிப்பதாகவும் அவர் சொன்னார்.

பெர்னாமா