சனிக்கிழமை பெர்சே போராட்டத்தைப் போலீஸ் ‘அனுமதிக்காது’

வரும் சனிக்கிழமை மெர்தேக்கா சதுக்கத்தில் குந்தியிருப்புப் போராட்டத்தை நடத்துவதற்கு பெர்சே திட்டமிட்டுள்ளதற்கு போலீஸ் அனுமதி அளிக்காது.

தனது முடிவுக்கு போலீஸ் “பாதுகாப்பு காரணங்களை” குறிப்பிட்டுள்ளது.

பெர்சே ஏப்ரல் 16, 19ம் தேதிகளில் சமர்பித்த கடிதங்களுக்கு பெர்சே நடவடிக்கைக் குழு உறுப்பினர் மரியா சின் அப்துல்லாவுக்கு அனுப்பியுள்ள பதில் கடிதத்தில் டாங் வாங்கி போலீஸ் மாவட்ட தலைமை அதிகாரி முகமட் சுல்கர்னெயின் அவ்வாறு தெரிவித்துள்ளார்.

போலீசிடமிருந்து கிடைத்த அந்தக் கடிதத்தின் பிரதி, தூய்மையான நேர்மையான தேர்தல்களுக்குப் போராடும் பெர்சே-யின் முக நூல் பக்கத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.