தொழிலாளர் நாள் : சுமார் 600-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பேரணியாக சென்றனர்!

தொழிலாளர் நாளான இன்று பல்வேறு தொழிலாளர் இயக்கங்களைச் சார்ந்த சுமார் 600-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இன்று காலை 10 மணி அளவில் கோலாலம்பூர் பசார் சினியில் அமைந்துள்ள மத்திய சந்தையின் முன் ஒன்று கூடி, அங்கிருந்து டாத்தாரன் மேபேங்க் கோபுரம் வரை பேரணியாக அணிவகுத்துச் சென்றனர். (படங்கள்) (காணொளி)

இப்பேரணியில் கலந்து கொண்ட தொழிலாளர்கள், அண்மையில் பிரதமர் நஜிப், புதிதாக அறிவித்திருந்த குறைந்தபட்ச ஊதியக் கொள்கைத் திட்டத்தை வன்மையாக கண்டித்ததுடன் அந்த முயற்சியை அரசாங்கம் உடனடியாக கைவிடவேண்டும் எனக் கோரிக்கை விடுத்து கோசங்களை எழுப்பினர்.

சிவப்பு சட்டைகளை அணிந்திருந்த அவர்கள் தொழிலாளர்களை அடிமையாக்கும் திட்டங்களை எதிர்த்து கோசமிட்டவாறு பாதாதைகள் ஏந்திச் சென்றர். கோலாலம்பூர் மட்டுமின்றி பல்வேறு இடங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் இப்பேரணியில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. தொழிலாளர்கள் அமைப்புகளை உள்ளடக்கிய ‘மே சத்து’ கூட்டமைப்பு இந்த பேரணியை ஏற்பாடு செய்தியிருந்தது.

(மேலதிக செய்தி விரைவில்…)