காணாமல்போன பள்ளி மாணவன் நாயத்தி கண்டுபிடிக்கப்பட்டார்!

பள்ளிக்குச் செல்லும் வழியில் கடந்த 27ஆம் தேதி இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட பள்ளி மாணவன் நயாத்தி ஷாமெலின் முதலியார் (வயது 12) இன்று காலை  ரவாங்கில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

மாண்ட் கியாரா பன்னாட்டுப் பள்ளிக்கு சென்ற வேளையில் கடத்தப்பட்ட பெலாண்டா நாட்டு பிரஜையான நயாத்தி பாதுகாப்புடன் கண்டுபிடிக்கப்பட்டுதாகவும், நாயத்தியை கண்டுபிடிக்க ஆதரவு நல்கிய அனைவருக்கும் தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாக அச்சிறுவனின் உறவினரான எஸ். சிவா கூறினார்.

அத்துடன், நயாத்தி கண்டுபிடிக்கப்பட்டது குறித்து விரைவில் ஊடக அறிக்கை ஒன்றினை வழங்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.

கடந்த 27-ஆம் தேதி நாயத்தி தனது பள்ளிச் சீருடையில் காலை 7.35-க்கு பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்தபோது பள்ளியிலிருந்து சிறிது தூரத்தில் கறுப்புச் செடானிலிருந்து இரு ஆடவர்கள் நாயத்தியை கடத்திக் கொண்டு காரில் வேகமாக சென்றனர் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர்.

நாயத்தி-ஐ கண்டுபிடிப்பதற்காகவும், அச்சிறுவன் காணாமல் போனது தொடர்பில் விழிப்புணர்வை பரப்ப உதவுமாறு சிறுவனின் குடும்பத்தாரும் அக்கறை கொண்ட பொதுமக்களும் சமூக ஊடங்களை நாடினர். அத்துடன் சுமார் 10, 000-க்கும் மேற்பட்ட போஸ்டர்கள் ஆங்காங்கே விநியோகிப்பட்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.