கேமிரா ஒளிப்பதிவு நீக்கப்பட்டது, இருந்தும் சூது இல்லையா

“நம்ப முடியாத குரோனர் தீர்ப்பையும் வெளிப்படுத்தப்படும் ஆத்திரத்தையும் பார்க்கும் போது மலேசியாவில் சட்ட ஆட்சி உண்மையில் சீரழிந்து கொண்டிருக்கிறது”

சார்பைனி மரணத்தில் சூது ஏதுமில்லை என நீதிமன்றம் தீர்ப்பு

பல இனம்: மூத்த சுங்க அதிகாரியான அகமட் சார்பைனி முகமட் தவறுதலாக கட்டிடத்தின் ஜன்னல் வழியாக நடந்து சென்று மரணத்தைத் தழுவினார் எனக் கூறுவதை மக்கள் எப்படி நம்ப முடியும் ?

அந்தச் சம்பவத்துக்கு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் பொறுப்பேற்க வேண்டும். யாரோ ஒருவர் சார்பைனி மரணத்துக்கு பொறுப்பாகும்  இதில் இரண்டு வழிகள் இல்லை.

மலேசிய நீதிமன்றங்களை மேலும் தாழ்வான நிலைக்குக் கொண்டு சென்ற குரோனர் அய்ஸாத்துல் அக்மால் மஹாராணிக்கு என் வாழ்த்துக்கள். இன்னும் எவ்வளவு காலத்துக்கு இது நீடிக்கும் ?

கோமாளி: “ஐயத்துக்குரிய மரணங்கள்” என்னும் தீர்ப்பை பிஎன் நீதிமன்றங்கள் வழங்குவது சாதாரணமாகி விட்டது. அதற்கு முன்னுதாரணம்: தியோ பெங் ஹாக் முடிவாகும்- கொலையுமல்ல, தற்கொலையுமல்ல. தீர்ப்பு எதிர்பாராத மரணம் என்பதாகும்.

எம்ஏசிசி அலுவலகங்கள் உலகில் மிகவும் ஆபத்தான இடங்களாக  இருக்க வேண்டும். அங்கு முதன் முறையாக செல்கின்றவர்கள் எதிர்பாராத மரணத்தையும் தழுவக் கூடும்.

கேஎஸ்டி: 22 மணி நேர கேமிரா ஒளிப்பதிவு நீக்கப்பட்டது. இருந்தும் சூது இல்லையா ?

விசுவாசி: நமது நல்ல பழைய தலைமை நீதிபதி இப்போது வெளியில் வந்து அந்தத் தீர்ப்புக்கும் தமக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் நீதித் துறையில் அரசாங்கத் தலையீட்டிலிருந்து விடுபட்டுள்ளது என்றும் கூவலாம்.

கேமிரா ஒளிப்பதிவு திருத்தப்பட்டுள்ளது தான் இதில் பெரிய வேடிக்கை ஆகும். அந்த ஒரு உண்மை மட்டும் போது ஏதோ சூது நடந்துள்ளது எனக் கருதுவதற்கும்.

கங்காரு: எதிர்பார்க்கப்பட்ட தீர்ப்பு

டிலா: “குரோனர் கூறுகிறார்: அந்த அறையில் அகமட் சார்பைனி மட்டும் தனித்து இருந்ததால் அவர் உணவு அறை ஜன்னல் வழியாக வெளியேற முடிவு செய்திருக்கலாம். பாட்மிண்டன் திடல் அருகில் இருக்கிறது என்ற மாயையான தோற்றம் காலஞ்சென்றவருக்கு தென்பட்டிருக்கலாம் என நீதிமன்றம் நம்புகிறது.”

ஒரு குழந்தை கூட இதனை நம்பாது.

அலோஷியஸ் திங்: எம்ஏசிசி கட்டிடத்திலிருந்து எதிர்பாராமல் விழக் கூடிய அடுத்த சம்பவத்துக்காக நாம் காத்திருப்போம்.

கேகன்: அம்னோ போலீசையும் எம்ஏசிசி-யையும் நீதித் துறையையும் ஏன் மருத்துவ தொழிலையும் கூட சீரழித்து விட்டது.

அம்னோ தீய சக்தியாகும். அம்னோ ஆட்சியில் தொடர்ந்து இருப்பதைக் காட்டிலும் நான் ஹுடுட் சட்டத்தை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன்.

கலா: நம்ப முடியாத குரோனர் தீர்ப்பையும் பல புகார்களையும் வெளிப்படுத்தப்படும் ஆத்திரத்தையும் பார்க்கும் போது மலேசியாவில் சட்ட ஆட்சி உண்மையில் சீரழிந்து கொண்டிருக்கிறது.

டாக்டர் மகாதீர் முகமட் அடிபணியச் செய்து விட்ட நீதித் துறையிடமிருந்து நீங்கள் என்ன எதிர்பார்க்கின்றீர்கள் ?