நான் பிபிஎப்- ஐபிபி- மசம கூட்டணியில் உள்ளேன், எனது எதிர்காலம் எப்படியிருக்கும்?

வீரன்: கோமாளி அண்ணே! நான் பிபிஎப் – ஐபிபி – மசம கூட்டணியில் உள்ளேன், எனது எதிர்காலம் எப்படி இருக்கும்.

கோமாளி: வீரா தம்பி, படிதாண்டா பத்தினியைப் பற்றி கேள்விப்பட்டிருப்பாய். இன்று எனக்கு மறுவாய்ப்பு கிடைத்தால் ஒரு படிதாண்டா பத்தினியைதான் தேடுவேன். காரணம், என்னிடம் எவ்வளவு குறைகள் இருந்தாலும் படிதாண்டா பத்தினி, கோமாளியான என்னையே ‘கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன்’ என்பாள். அவ்வளவு விசுவாசம், ஏதோ நானே அவளுக்கு ஒரு விமோசனம் கொடுத்ததுபோல் தனது மனதிலே என்னைத் தூக்கி வைத்துக் கொள்வாள். நான் அவளை தரக்குறைவாகத் ‘தேவுடியா’ என்றால்கூட தான் ஏதோ குற்றம் செய்துவிட்டதால் எனக்கு கோபம் வந்து விட்டதாக வருந்துவாள். நான் சாப்பிட்ட பிறகுதான் சாப்பிடுவாள், அதுவே தனது பாக்கியம் என்பாள்.

எனது பாலியல் சிற்றின்பங்களுக்கு நான் அவளை எப்படி பிழிந்தாலும் எனது இன்பத்திற்கான தனது தியாகம் என்றே நினைப்பாள். நான் செய்ய வேண்டியதெல்லாம் “நீ ஒரு படிதாண்டா பத்தினி” என்ற முத்திரையைத் தொடர்ந்து அவனது உள்ளத்திலேயே ஆழமாகப் பதித்துக் கொண்டே இருக்க வேண்டும், அவ்வளவுதான். அந்த உணர்வையே அவள் கவசமாகக் கொண்டு, அதுதான் தன்னை வாழ வைக்கிறது என்று எனக்கு ஆளுயர மாலையும் போடுவாள்.

மாங்கல்ய பாக்கிய விரதமும் இருப்பாள். எனக்காக உயிரையும் கொடுப்பாள், நான் இல்லாவிட்டால் உயிரையும் விடுவாள். தம்பி உங்களை அரவணைத்துக் கொண்டிருக்கும் அரசியல் கட்சி மிகவும் கொடுத்து வைத்தது. தாங்கள் ஒரு படிதாண்ட பத்தினியாகவே இருப்பதில்தான் சுகம். (பெண்கள் கோமாளியை தவறாக புரிந்துக் கொள்ளக்கூடாது. ஆழமாக கோமாளி சொல்வதை உணரும்போது, எப்படிப்பட்ட போக்கு முட்டாள்தன மானது என்பது பொருள்படும்.)