தாய்லாந்தில் தங்கியிருக்கும் மலேசியாவின் முன்னாள் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சின் பெங் தாய்லாந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அங்கு அவருடைய உடல்நிலை மோசமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இரு நாள்களுக்கு முன்பு சின் பெங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாக சின் சியு வட பகுதி பதிப்பு கூறுகிறது.
அச்செய்தியின்படி, மருத்துவர்கள் சின் பெங்கின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள், மலேசியாவில் வசிப்பவர்கள் உட்பட, உடனடியாக சென்று அவரை காண வேண்டும் என்று கூறியுள்ளனர்.
கடந்த இரண்டு மாதங்களாக சின் பெங் பல தடவைகளில் மருத்துவ சிகிட்சைக்காக சென்றுள்ளதாகத் தெரிகிறது.
(மேல் விபரம் பின்னர்)