‘அந்நிய தொழிலாளர்களுக்குக் குறைந்தபட்ச சம்பளம் வேண்டாம்’

1ngoஇன்று புத்ரா ஜெயாவில், சுமார் ஆயிரம் தொழிலாளர்களும் முதலாளிமாரும் அந்நிய தொழிலாளர்களுக்குக் குறைந்தபட்ச சம்பளம் கொடுக்கும் கொள்கையை எதிர்த்து அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

1ngo1மனிதவள அமைச்சுக்கு வெளியில் உள்ள ஒரு திடலில் ஒன்றுதிரண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், அரசாங்கத்தின் ‘தவறுகளுக்கு’ அமைச்சர் எஸ்.சுப்ரமணியம் பதவிதுறக்க வேண்டும் என்று முழக்கமிட்டனர்.

57 என்ஜிஓ-களைப் பிரதிநிதிக்கும் குறைந்தபட்ச சம்பள இயக்கக்குழு அந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது.

1ngo2குழு உறுப்பினர்களில் ஒருவரான கோ சின் சியோங், சுப்ரமணியத்தை “அந்நிய தொழிலாளர்களின் அமைச்சர்” என்று வருணித்தார். அக்கொள்கையால் 4விழுக்காட்டு மலேசியர்கள் மட்டுமே நன்மை அடைவர் என்றவர் கூறிக்கொண்டார்.

உள்நாட்டுத் தொழிலாளர்களுக்குக் குறைந்தபட்ச சம்பளம் நிர்ணயிக்கப்படுவதை என்ஜிஓ-கள் ஆதரிப்பதாகக் கூறிய அவர் ஆனால் இந்தக் கொள்கையை அவை எதிர்ப்பதாகக் கூறினார். ஏனென்றால், இது நான்கு மில்லியன் அந்நிய தொழிலாளர்களுக்குத்தான் சாதகமாக உள்ளது.

இக்கொள்கையால் சிறிய-நடுத்தர தொழில் செய்யும் 600,000பேர் பாதிக்கப்படுவர், ஏனென்றால் தொழிலாளர்களின் சம்பளத்தில் ரிம1.8பில்லியன் கூடிவிடும் என்றும் கோ கூறினார்.