மஇகா-வுக்கு 2 சட்டமன்றத் தொகுதிகள் மட்டுமே எனக் கூறப்படுவதை ஜாம்ரி மறுக்கிறார்

electionபேராக்கில் 13வது பொதுத் தேர்தலில் மஇகா-வுக்கு இரண்டு சட்டமன்றத் தொகுதிகள் மட்டுமே வழங்கப்படும் எனக் கூறப்படுவதை பேராக் மந்திரி புசார் ஜாம்ரி அப்துல் காதிர் நிராகரித்துள்ளார்.

அது சில தரப்புக்களின் வெறும் ஊகமே என அந்த மாநில பிஎன் தலைவருமான ஜாம்ரி சொன்னார்.

“நடப்பு கோட்டா அடிப்படையில் அமைந்த இட ஒதுக்கீட்டில் (உறுப்புக் கட்சிகளுக்கு) நாங்கள் எப்போதும் இணக்கத்துடன் செயல்பட்டு வருகிறோம்,” என அவர் இன்று ஈப்போவில் நிருபர்களிடம் கூறினார்.

பிஎன் -னுக்கான இந்திய சமூகத்தின் ஆதரவையும் மஇகா-வின் ஆதரவையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. பிஎன் பங்காளித்துவ உணர்வு எப்போதும் நிலை நிறுத்தப்பட வேண்டும் என்பதே முக்கியமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.election1

கடந்த பொதுத் தேர்தலில் பேராக்கில் இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. தாப்பா, சுங்கைசிப்புட் ஆகியவையே அவை.

மஇகா-வின் எம் சரவணன் தாப்பா தொகுதியில் வெற்றி பெற்றார். ஆனால் அதன் தலைவர் எஸ் சாமிவேலு சுங்கை சிப்புட்டில் தோற்கடிக்கப்பட்டார்.

அந்த மாநிலத்தில் அந்தக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நான்கு சட்டமன்றத் தொகுதிகளிலும்- பாசிர் பாஞ்சாங்,

சுங்காய், ஹுத்தான் மெலிந்தாங், பெஹ்ராங்- அது தோல்வி அடைந்தது.

 

TAGS: