மலேசியாவில் பத்திரிகைச் சுதந்திரம் முன் எப்போதையும்விட மோசமான நிலையில் இருக்கிறது. உலக பத்திரிகைச் சுதந்திரக் குறியீட்டுப் பட்டியலில் 145வது இடத்தில் வருகிறது மலேசியா. 2002-இல் அப்பட்டியல் தொடங்கப்பட்டதிலிருந்து இவ்வளவு மோசமான நிலைக்கு அது தாழ்ந்தது கிடையாது.
இதற்கு, கடந்த ஏப்ரலில் பெர்சே 3.0மீதான போலீஸ் அடக்குமுறையும் செய்திகள் தணிக்கை செய்யப்படுவதும் அடிப்படை உரிமைகள் பறிக்கப்படுவதும்தான் காரணம் என Reporters sans Frontières (RSF-எல்லைகளற்ற செய்தியாளர்கள்) அமைப்பு கூறுகிறது.
2010-இல் மலேசியா 111வது இடத்தில் இருந்தது.2011-2012-இல் படிப்படியாக 122 இடத்துக்கு முன்னேறியது.
179 நாடுகளைக் கொண்ட அப்பட்டியலில் மலேசியாவுக்கு மேலே வங்காள தேசம், லிபியா, கிர்கிஸ்தான், தாய்லாந்து, இந்தோனேசியா, புருணை ஆகியவை இடம்பெற்றுள்ளன.
சிங்கப்பூருக்கு 149-வது இடம். பர்மா, கடந்த ஆண்டில் அங்கு ஏற்பட்ட “மிகப் பெரிய மாற்றங்களை” அடுத்து 18 படிகள் உயர்ந்து 149-வது இடத்தில் உள்ளது.