சுகுமாரன் குடும்பம் பொய்யான மரண விசாரணையை வெறுத்து ஒதுக்குகிறது

1autopsyசி.சுகுமாரனின் இறப்பு குறித்து மரண விசாரணை நடத்தப்படும் என்று முன்மொழிபட்டிருப்பதைப் புறம்தள்ளிய அவரின் குடும்பத்தார், அவர் ஜனவரி 23-இல், கைவிலங்கிடப்பட்ட நிலையில் போலீசாரால் தாக்கப்பட்டார் என்றே நம்புகின்றனர்.

1autopsy1“நேரில் பார்த்தவரின் சாட்சியங்கள் தாக்கப்பட்டார், கொல்லப்பட்டார் என்று காட்டும்போது மரண விசாரணை நடத்தப்படும் என்று கூறுவது பொருந்தாது..இந்தப் பொய்யான விசாரணையில் சுகுமாரனின் குடும்பத்தார் கலந்துகொள்ள மாட்டார்கள் என்பதைத் திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறோம்”, என்று அக்குடும்ப வழக்குரைஞர்களான லத்தீபா கோயாவும் (இடம்) என்.சுரேந்திரனும் கூறினர்.

“கொலைமீதான புலன் விசாரணை நடத்துவதை விடுத்து மரண விசாரணை நடத்தப்போவதாகக் கூறுவது சுகுமாரனின் மரணத்தை மூடிமறைக்கும் பெருந் திட்டத்தின் ஒரு பகுதியாகும். உள்துறை மைச்சு, சட்டத்துறைத் தலைவர், அரசாங்கம் ஆகியோர் அதில் சம்பந்தப்பட்டுள்ளனர்”, என்றவர்கள் குறிப்பிட்டனர்.

1autopsy polisசிலாங்கூர் போலீஸ் தலைவர் துன் ஹிசான் துன் ஹம்சா  (இடம்), அம்மரணம்மீது விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியிருந்தார். அவரது வேண்டுகோளை ஏஜி ஏற்றுக்கொண்டதாக புக்கிட் அமான் நேற்று அறிவித்தது.

நேற்று, மூன்று சாட்சிகள் பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் நிலையம் சென்று தங்கள் வாக்குமூலங்களைப் பதிவு செய்தனர். அவர்களுடன் லத்தீபாவும் உரிமைகளுக்காக போராடும் அமைப்பைச் சேர்ந்த எரிக் பால்சனும் சென்றிருந்தனர்.

அந்தச் சாட்சிகள் பற்றி போலீசாருக்குத் தெரிந்திருந்தாலும் அவர்களைக் கண்டுபிடிக்க அவர்கள் முயற்சி செய்யவில்லை என்று லத்தீபாவும் சுரேந்திரனும் தெரிவித்தனர்.

“சாட்சிகள் தாங்களாகவே முன்வந்தார்கள். அவர்களின் வாக்குமூலம் அதிர்ச்சி அளித்தது. அது, அவரின் குடும்பத்தார் நம்புவதுபோல், சுகுமாரன் போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்டார் என்பதை உறுதிப்படுத்துகிறது”, என்றவர்கள் கூட்டு அறிக்கையொன்றில் கூறியிருந்தனர்.

“சாட்சிகள் போலீஸ் அதிகாரி சுகுமாரனின் கழுத்தில் பூட்ஸ் காலால் மிதித்துக்கொண்டிருந்ததையும் சுகுமாரன் கழுத்தை விடுவிக்க முயன்றதையும் பார்த்ததாக தெரிவித்துள்ளனர் சுகுமாரனின் உடலில் அசைவுகள் ஒடுங்கும்வரை அவர் கழுத்தை மிதித்துக் கொண்டிருந்தார்.”

அப்படி இருக்க, மரண விசாரணை மட்டுமே என்பதை போலிசும் ஏஜியும் எப்படி நியாயப்படுத்தப் போகிறார்கள் என்று அவ்விருவரும் வினவினர்.

“சுகுமாரனின் குடும்பத்தார் சார்பில், கொலை மீது புலன் விசாரணை உடனடியாக நடத்தப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்”, என்றவர்கள் வலியுறுத்தினர்.