என்எப்சி விவகாரம் தம்மைப் பாதிக்காது என்கிறார் நொங் சிக்

1nong cikமுன்னாள் அமைச்சர் ஷாரிசாட் குடும்பம் சம்பந்தப்பட்ட ஃபீட்லோட் கார்ப்பரேசன் (என்எப்சி) ஊழல் விவகாரம்,  லெம்பா பந்தாய் தொகுதியை வெற்றிகொள்ளும் தம் முயற்சியைப் பாதிக்காது என்று கூறுகிறார் கூட்டரசு பிரதேச, நகர்புற நல்வாழ்வு அமைச்சர் ராஜா நொங் சிக் சைனல் அபிடின்.

1nong cik1“அதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை. கடுமையான உழைப்புத்தான் தேவை”.லெம்பா பந்தாய் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள தாமான் லக்கி குடியிருப்புப் பகுதியில் குடியிருப்பாளர்களுக்கு ஆரஞ்ச் பழங்களை வழங்கிய பின்னர் செனட்டர் செய்தியாளார்களிடம் பேசினார்.

எதிர்வரும் தேர்தலில் லெம்பா பந்தாய் வேட்பாளர் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை இல்லை என்றாலும் ராஜா நொங் சிக்-கைத்தான் அத்தொகுதியின் பிஎன் வேட்பாளராக பலரும் பார்க்கிறார்கள்.

ஷரிசாட் அத்தொகுதியில் குறிப்பிடத்தக்க பணியாற்றியுள்ளதாக நொங் சிக் பாராட்டினார். மூன்று தவணைக்காலம் லெம்பா பந்தாய் எம்பியாக இருந்த ஷரிசாட், 2008 பொதுத் தேர்தலில் பிகேஆரின் நூருல் இஸ்ஸா அன்வாரிடம் தோற்றார்.

பிகேஆர் உதவித் தலைவருமான நூருல் இஸ்ஸா, 2895 வாக்குகள் பெரும்பான்மையில் அப்போது அமைச்சராக இருந்த ஷாரிசாட்டைத் தோற்கடித்தார்.

1nong cik sharizatபின்னர், ஷரிசாட் (வலம்) செனட்டராகவும் மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சராகவும்  நியமிக்கப்பட்டார்.

ஆனால், அவரின் கணவர் முகம்மட் சாலே இஸ்மாயில், அவரது நிறுவனமான என்எப்சிக்கு அரசாங்கம் வழங்கிய நிதியைத் தவறாகப் பயன்படுத்திய விவகாரம் அம்பலமானதை அடுத்து ஷரிசாட் அமைச்சரவையிலிருந்து வெளியேறினார்.

முகம்மட் சாலே, 1965ஆம் ஆண்டு நிறுவனச் சட்டத்தை மீறி நம்பிக்கை மோசடி செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது.