நஜிப் சிலாங்கூர் பிஎன் தேர்தல் இயக்குநர் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டுள்ளார்

najibஇப்போது சிலாங்கூர் பிஎன் தலைவராக இருந்து வரும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அந்த மாநிலத்துக்கான பிஎன் தேர்தல் இயக்குநர் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டுள்ளது, அந்த மாநில அம்னோவுக்குள் உட்பூசல் தீவிரமடைந்துள்ளது என்ற ஊகங்களை மேலும் வலுப்படுத்துயுள்ளது.

இவ்வாறு சிலாங்கூர் பாஸ் துணைத் தலைவரும் ஷா அலாம் எம்பி-யுமான காலித் சமாட் சொல்கிறார்.

நாட்டில் பணக்கார மாநிலங்களில் ஒன்றான சிலாங்கூரை மீண்டும் கைப்பற்றுமானால் யார் மந்திரி புசார் பொறுப்பை ஏற்பது என்பது மீது மாநில மூத்த அம்னோ தலைவர்களிடையே மோதல்கள் நிகழுவதைத் தவிர்க்கும் பொருட்டு நஜிப் அந்த மாநில பிஎன் தேர்தல் இயக்குநர் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டுள்ளதாக காலித் சமாட் கருதுகிறார்.
“அது சிலாங்கூர் பிஎன் தலைமைத்துவத்தைத் தெளிவாக அடையாளம் காண முடியவில்லை என்றும் தங்களிடம் மந்திரி புசார் வேட்பாளர் இல்லை என்பதையும் அவர்கள் ஒப்புக் கொள்வதற்கு ஒப்பாகும்,” என அவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.najib1

சாத்தியமான சிலாங்கூர் மந்திரி புசார் பதவிக்கு சாத்தியமான வேட்பாளர்கள் எனக் கருதப்பட்ட மாநில பிஎன் ஒருங்கிணைப்பாளர் முகமட் ஜின் முகமட்டும். துணைத் தலைவர் நோ ஒமாரும் தேர்தல் வியூகங்கள் உட்பட பல விஷயங்களில் கருத்து வேறுபாடு கொண்டுள்ளனர்.

ஒதுக்கப்பட்ட தரப்பு சதி நாச வேலைகளில் ஈடுபடாமல் இருப்பதற்காக பொதுத் தேர்தலுக்கு முன்னதாக மந்திரி புசார் வேட்பாளர் பெயரைக் குறிப்பிடுவதை நஜிப் தவிர்க்கிறார் என்பது தெளிவாகும்.

இதனிடையே சிலாங்கூரில் நஜிப்பின் பங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது, பிஎன் -னிடம் நம்பிக்கை இல்லை என்பதையும் காட்டுவதாக சிலாங்கூர் பிகேஆர் செயலாளரும் பத்துகேவ்ஸ் சட்டமன்ற உறுப்பினருமான அமிருடின் ஷாரி கூறியிருக்கிறார்.

“அவர்கள் அச்சமடைந்துள்ளதை அது காட்டுகிறது. அவர்களுடைய மாநிலத் தலைவர்களுக்கு இடையில் பிளவுகள் தெளிவாகத் தெரிகின்றன.”

சிலாங்கூரில் தேர்தலில் தான் வெற்றியடைய முடியும் எனப் பகிரங்கமாக பிஎன் காட்டிக் கொள்ளும் வேளையில் தேசிய விவகாரங்களில் கவனம் செலுத்த வேண்டிய நஜிப் மாநிலத்தில் சிக்கிக் கொண்டுள்ளது வினோதமாகும்.

“அது மிகவும் மர்மமாக இருக்கிறது. அவர்களிடம் சாத்தியமான தலைவர் இல்லை. அதனால் அவர்கள் தேசியத் தலைவரை ஏற்றுக் கொள்ள வேண்டியுள்ளது,” என்றார் அவர்.

முகமட் ஜின்: நஜிப் ‘நேரடியாக கவனிக்கிறார்’

சிலாங்கூரில் யார் மந்திரி புசார் வேட்பாளர் என்ற கேள்வியை மாநில வாக்காளர்கள் எழுப்புவதற்கு அந்த அண்மைய அறிவிப்பு வழி வகுக்கும் என மாநில டிஏபி துணைச் செயலாளரும் செர்டாங் எம்பி-யுமான தியோ நீ சிங் கூறினார்.

“நாங்கள் நிழல் அமைச்சரவையை பெற்றிருக்கவில்லை என பிஎன் எங்களை அடிக்கடி குறை சொல்கிறது.  ஆனால் சிலாங்கூரில் யார் அவர்களுடைய மந்திரி புசார் வேட்பாளர் யார் என்பதில் பிஎன் அதனைத் தான் செய்து கொண்டிருக்கிறது.”

“அவர்களுடைய தலைவர் யார் என்பதை அறிய மக்கள் விரும்புகின்றனர். அப்போது தான் மக்கள் அவரை நடப்பு மந்திரி புசார் அப்துல் காலித் இப்ராஹிமுடன் ஒப்பிட்டு பார்க்க முடியும்,” என்றார் அவர்.

கடந்த சனிக்கிழமை சிலாங்கூர் பிஎன் தேர்தல் இயக்குநராகவும் நஜிப் நியமிக்கப்பட்டுள்ளதாக உத்துசான் மலேசியா அறிவித்தது. அந்த மாநிலத்தில் பிஎன் தேர்தல் எந்திரத்துக்கு அவர் தலைமை தாங்குவார் என்பதே அதன் பொருளாகும்.

najib22008 தேர்தலில் மோசமான அடைவு நிலையைப் பெற்ற பிஎன் இப்போது வலுவடைந்துள்ளது என்பதைக் காட்டுவதற்கு சிலாங்கூரைக் கைப்பற்றுவது முக்கியம் எனக் கருதுவதாக் நஜிப் அந்தப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டுள்ளதாக பிஎன் தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.

“அது சிலாங்கூரில் அவரது நம்பிக்கையையும் நேரடிப் பங்கையும் காட்டுகிறது,” என மாநில பிஎன் ஒருங்கிணைப்பாளர் முகமட் ஜின் முகமட் கூறினார்.