ஜோகூர் பாருவில் இன்று காலை மாநில பிஎன் அறிவித்த தனது வேட்பாளர் பட்டியலில் அந்த மாநிலத்தில் உள்ள ஒரு நாடாளுமன்ற, இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு குறிப்பிடப்பட்ட மசீச வேட்பாளர்களுடைய பெயர்கள் காணப்படவில்லை.
தஞ்சோங் பியாய் நாடாளுமன்றத் தொகுதி, செனாய், பெக்கான் நெனாஸ் சட்டமன்றத் தொகுதிகள் ஆகியவையே அவை.
மசீச நேற்று அறிவித்த பட்டியலில் தஞ்சோங் பியாய் தொகுதியில் வோங் யூ போங்கும் பெக்கான் நெனாஸில் வீ ஜாக் செங்-கும் செனாயில் தாங் நை சூன்-னும் நிறுத்தப்படுவர் எனக் கூறப்பட்டிருந்தது.