மூவாரில் காற்றின் தரம் மோசமடைந்ததால் பள்ளிகள் மூடப்பட்டன

1 doeமூவாரில் காற்றின் தரம் புகைமூட்டத்தின் காரணமாக ‘அபாய எல்லை’யைத் தொட்டு விட்டது என இன்று காலை சுற்றுச்சூழல் துறை (டிஓஇ) இணையத்தளம் கூறியது.

காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு, மூவாரில் காலை 7 மணிக்கு 331 ஆக இருந்ததாம். 301 என்ற நிலையைத் தாண்டுவது அபாயகரமானது எனக் கருதப்படுகிறது. 201-க்கு மேற்போனால் அது ‘ஆரோக்கியத்திற்குக் கேடானது’.

மூவார் மாவட்ட கல்வித் துறை இன்று பிற்பகல் தொடங்கி நாளைவரை பள்ளிகள் மூடப்படும் என அறிவித்துள்ளது.