மக்களவையில் புகை மூட்ட நெருக்கடியை அவசரமாக விவாதிப்பதற்காக பிஎன், பக்காத்தான் ராக்யாட் எம்பி-க்கள் சமர்பித்த தீர்மானங்களை சபாநாயகர் பண்டிக்கார் அமீன் முலியா நிராகரித்துள்ளார்.
அரச உரை மீதான விவாதத்தின் போது அந்தத் தீர்மானங்களை டிஏபி கூலாய் எம்பி தியோ நீ சிங்-கும் மசீச ஆயர் ஹீத்தாம் எம்பி வீ கா சியோங்-கும் கொண்டு வந்தனர்.
“புகை மூட்டப் பிரச்னை இந்தோனிசியாவிலிருந்து வருவதால் நாம் அதனை விவாதிக்க முடியாது என சபாநாயகர் என்னிடம் கூறினார்,” என தியோ நிருபர்களிடம் தெரிவித்தார்.
பொது மக்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த அவசரமான விவகாரங்களில் அவசரமாக விவாதம் நடத்துவதற்கு வகை செய்யும் நிரந்தர ஆணை 18 (1)ன் கீழ் அவ்விரு தீர்மானங்களும் சமர்பிக்கப்பட்டன.
மாமன்னர் அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன் படுத்தி இந்த சபாநாயகரை நீக்கி, தேர்தல் ஆனையத்தையும் நீக்க வேண்டும்.அதைவிடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்குகிறார்! இது இரண்டும் அம்னோவின் எடுபிடி என்பது தெழிவாக தெரிகிறது. “புகை மூட்டப் பிரச்னை இந்தோனிசியாவிலிருந்து வந்தாலும் இந்நாட்டு மக்களை பாதிக்கும்
முக்கியத்துவம் வாய்ந்த அவசரமான விவகாரம். அவசரமாக விவாதம் நடத்துவதற்கு வகை செய்யும் நிரந்தர ஆணை 18 (1)ன் கீழ் அவ்விரு தீர்மானங்களும் விவாதிக்க தகுதியானவை. தகுதியற்ற இவர்கள் பதவியில் இருந்தால் இந்நாட்டிக்கே அதிக கேடு. பாவம் மக்கள்