போலீஸ் மீதான புகார்களையும் தப்பான நடவடிக்கைகளையும் விசாரிக்க தனி ஆணையம் (IPCMC) அமைக்க வேண்டும் என்ற பரிந்துரையை கோலாலும்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி வி.டி. சிங்கம் வரவேற்கிறார் . தடுப்புக்காவல் மரணம் அதிகரித்து வருவதைக் கருத்தில்கொண்டு அவர் அந்த ஆணையம் அமைவதை ஆதரிக்கிறார்.
“அரச ஆணையம் செய்த பரிந்துரையைக் கிடப்பில் போட்டு வைக்கக் கூடாது.
“அதை விரைவில் செயல்படுத்த வேண்டும். அப்போதுதான் சம்பந்தப்பட்டவர்களுக்கு போலீஸ் தலையீடின்றி ஒரு தனி அமைப்பு விவகாரங்களை ஆராய்ந்து வருகிறது என்ற மனநிறைவு ஏற்படும்”, என்றாரவர்.
தடுப்புக்காவலில் இறந்துபோன ஏ.குகனின் குடும்பத்தார் அரசாங்கத்துக்கு எதிராக தொடுத்த வழக்கில் தீர்ப்பளித்தபோது சிங்கம் இவ்வாறு கூறினார்.
நீதிபதி அவர்களுக்கு ஆயிரம் வணக்கங்கள்! ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைதானால் அவரை காவலில் வைத்து விசாரிக்க ஒரு நீதிபதியின் உத்தரவை வாங்க வேண்டும் . அப்போது அந்த நீதிபதி கைதானவரை நேரில் பார்பாரா , என்னநிலையில் கைதி உள்ளார் , ஆரோக்கியமாக இருக்கிறாரா போன்ற விசயங்களை அறிவாரா ? அல்லது ஆளை பார்க்காமலேயே காகிதத்தில் மட்டும் கையெழுத்து போட்டு கொடுத்துவிட்டு படுக்க சென்று விடுவாரா? கைதியின் நிலையை முன்கூட்டியே கண்டறிந்தால் பல கொடூரங்கள் நடப்பதை தடுக்க முடியும் . சாத்தியமாகுமா??
நீங்க வி.டி.சிங்கமா அல்லது நஜிப் அனுப்பிய கே.டி.சிங்கமா? என்னமோ எல்லாம் நல்லதாக நடந்தால் சரி.
சபாஸ்……….!!!!!!
வாழ்துக்கள் நீதிபதி அவர்களே ,தங்களின் இந்த பரிந்துரை வரவேற்க பட வேண்டும் .
ஏதோ ஓரிரு நல்ல நீதிபதிகள் இவரைப்போன்று இருப்பதால்தான் இன்னும் இந்நாட்டில் நீதி கிடைக்கும் என்று நம்பி வாழ வேண்டி இருக்கிறது. இவரை என் இன்னும் மேல்நிலை கோர்ட்டுக்கு உயர்த்தாமல் இருகின்றார்கள்? எல்லாம் நல்லதுக்கே என்று நடை போடு சிங்கம் ராஜா!