தேர்தல் ஆணையத் தலைவர் அப்துல் அஜிஸ் முகமட் யூசோப் அலுவலகத்துக்கு சில நாட்களுக்கு முன்பு அறுக்கப்பட்ட கோழித் தலையைக் கொண்ட பார்சல் அனுப்பப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக்கில் சுற்றப்பட்டிருந்த அந்த “நாற்றமான’ பார்சலில் மிரட்டும் குறிப்பு ஒன்றும் இருந்தது.
“பதவி விலகுங்கள் அல்லது … 505” என அந்தக் குறிப்பில் எழுதப்பட்டிருந்தது என பெரித்தா ஹரியான் நாளேட்டின் இணைய செய்தித் தளம் கூறியது.
அப்துல் அஜிஸும் அவரது துணைத் தலைவரும் உட்பட இசி தலைமைத்துவம் விலக வேண்டும் எனக் கோரி எதிர்க்கட்சிகள் நாடு முழுவதும் நடத்தும் பேரணியை அது குறிப்பிடுகின்றது என்பது தெளிவாகும்.
அந்தப் பார்சல் “Aziz Bin Yusof”, “Tingkat 4 SPR” என முகவரியிடப்பட்டிருந்தது என்றும் கிளானா ஜெயாவைச் சேர்ந்த அனுப்பியவரின் பெயர் உட்பட முழுமையாக இருந்தது என்றும் போலீஸ் தெரிவித்தது.
அந்தப் பார்சல் நேற்று திறக்கப்பட்டது. அது குறித்து போலீசில் புகார் செய்யுமாறு இசி தலைவர் தமது ஊழியர்களுக்கு ஆலோசனை கூறினார்.
அந்தப் பார்சல் குறித்து அப்துல் அஜிஸின் கருத்துக்களைப் பெற பெரித்தா ஹரியான் மேற்கொண்ட முயற்சி பலனளிக்கவில்லை.
எடுத்து சூப்பு வச்சி குடிங்க ,,நரம்பு நன்றாக புடைக்கும்