சர்ச்சையை ஏற்படுத்திய மதம் மாற்ற மசோதாவை அமைச்சரவை மீட்டுக் கொள்கிறது

parliament0314அமைச்சரவை,  சர்ச்சையை ஏற்படுத்திய 2013ம் ஆண்டுக்கான இஸ்லாமிய சட்ட  நிர்வாக (கூட்டரசுப் பிரதேசம்) மசோதாவை மீட்டுக் கொண்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் முதல் வாசிப்புக்கு சமர்பிக்கப்பட்ட அந்த மசோதாவை மீட்டுக்  கொள்வது என அதன் இன்றையக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

குழந்தையை மதம் மாற்றுவதற்கு பெற்றோர்களில் ஒருவருடைய ஒப்புதல் மட்டும்  போதுமானது எனக் கூறியதின் மூலம் அந்த மசோதா பெரும் சர்ச்சையை  உருவாக்கி விட்டது.

அந்த மசோதா மீட்டுக் கொள்ளப்படுவதை அறிவித்த துணைப் பிரதமர்
முஹைடின் யாசின், தாய் அல்லது தந்தை இஸ்லாத்துக்கு மதம் மாறும் போது  குழந்தையின் நிலை என்ன என்பது பற்றி அமைச்சரவை விரிவாக விவாதித்தாகச்  சொன்னார்.

“பிஎன் உறுப்புக் கட்சிகள் பரிசீலினைக்கு எடுத்துக் கொண்ட பல கருத்துக்களும்  அவற்றுள் அடங்கும்.”

“அவற்றின் அடிப்படையில் அந்த மசோதாவை மீட்டுக் கொள்வதென இன்றைய  அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது,” என்றார் அவர்.