பேரங்காடி ஒன்று நடத்தும் தொடர் மினி மார்க்கெட்-கடைகளுக்கு எதிராக ஆட்சேபம் தெரிவிப்பதற்காக வணிகர் சங்க உறுப்பினர்கள் நேற்று ஷா அலாமில் இரண்டு தொடர் மினி மார்க்கெட் கடைகளுக்கு வெளியில் கூடினர்.
மலேசிய முஸ்லிம் மொத்த விற்பனையாளர்கள், சில்லறை வணிகர்கள் சங்கத்தைச் சேர்ந்த 30 பேர், நேற்று பிற்பகல் 99 Speedmart கடை ஒன்றுக்கு வெளியில் கூடி கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கு சுலோகங்களை முழங்கினர்..
அடுத்து அவர்கள் Giant பேரங்காடி நடத்தும் இன்னொரு மினி மார்க்கெட்டுக்கு வெளியில் கூடி ஆட்சேபம் தெரிவித்தனர்.
‘99 Speedmart, 450 கடைகள் – ஒரே குடும்பம்’, ‘Giant மினி மார்க்கெட்டுகளை அழிக்கிறது’ எனக் கூறும் வாசகங்களை கொண்ட பதாதைகளையும் அவர்கள் ஏந்தியிருந்தனர்.
பெரிய தொடர் நிறுவனங்களினால் உள்ளூர் குடும்பங்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து வருவதாக அந்த சங்கத்தின் ஆலோசகர் பஷீர் அகமட் சொன்னார்.
அந்த பெரிய தொடர் நிறுவனங்கள் நிறையக் கொள்முதல் செய்ய முடியும் என்பதால் சிறிய வணிகர்கள் வியாபாரத்தை இழக்க வேண்டியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
நாட்டின் வளர்ச்சிக்கு ஏற்றப நமக்கு giant போன்ற வணிக அரங்க்கங்கள் தேவை படுகின்றன்ன. இவைக்களை முற்றிலுமாக குறை சொல்ல கூடாது. சிறிய வணிகர்கள் காலதிர்க்கேப்ப தங்களை மேம்படுத்தி கொள்ள வேண்டும். இதற்க்கு நாம் வளர்ச்சி அடைந்த நாடுகளை பின் பற்றள்ளம்.
இன்று 450 கடைகளை வைத்திருப்பவர்கள் தொடக்கத்தில் ஒரு கடையிலிருந்து வியாபாரத்தை ஆரம்பித்தவர்கள்தான். மதிநுட்பம், கடும் உழைப்பு, வியாபார யுக்தி ஆகியவை அவர்களை இந்த நிலைக்கு உயர்த்தியுள்ளது. மற்றவர்களுக்கு ஈடாக தாங்களும் மேம்பாடு காண்பதற்கான வழி வகைகளை ஆராய்வதை விடுத்து அவர்களைக் கண்டு பொறாமைப் படும் இவர்களை நினைத்தால் பரிதாமாக உள்ளது.