கோலா பெசுட் இடைத் தேர்தலில் பாஸ் “போட்டியிட வேண்டிய அவசியமே இல்லை” என்கிறார் கல்வி அமைச்சர் II இட்ரிஸ் ஜூஸோ. அது அண்மைய பொதுத் தேர்தலுக்குப்பின் “அரசியலைக் குறைக்க” உதவும் என்றவர் கருதுகிறார்.
மே 5 தேர்தலில் நல்ல பெரும்பான்மையில் பிஎன் அத்தொகுதியை வென்றதால் அத்தொகுதியை அதனிடமே விட்டுவிட வேண்டும் என்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.
“1,200 வாக்குகளைக் கூடுதலாகப் பெற்று அத்தொகுதியை பாஸினால் வெல்ல முடியாது”, என்று அத்தொகுதியின் இந்நாள் எம்பியும் திரெங்கானுவின் முன்னாள் மந்திரி புசாருமான இட்ரிஸ் கூறினார்.