இஸ்லாமியச் சட்ட நிர்வாக (கூட்டரசுப் பிரதேசம்) சட்டத்தைத் திருத்துவதற்காக முன்மொழியப்பட்ட மசோதாவை மீட்டுக் கொள்ளுமாறு அமைச்சர்கள் அழுத்தம் கொடுக்கவில்லை எனப் பிரதமர் துறை அமைச்சர் ஜமீல் கிர் பாஹாரோம் சொல்கிறார்.
‘தன்மூப்பான மதம் மாற்ற மசோதா’ என அழைக்கப்பட்ட அந்த மசோதாவை மீட்டுக் கொள்ளும் முடிவு இணக்க அடிப்படையில் எடுக்கப்பட்டதாக ஜமீல் இன்று நிகழ்வு ஒன்றில் கூறினார்.
‘இல்லை நெருக்குதல் ஏதுமில்லை. இணக்க அடிப்படையில் அந்த மசோதா மீட்டுக் கொள்ளப்பட்டது.”
இஸ்லாமிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சருமான ஜமீல் இன்று மக்களவையில் அந்த மசோதாவையும் இஸ்லாம் சம்பந்தப்பட்ட மற்ற இரண்டு மசோதாக்களையும் மீட்டுக் கொண்டார்.
மனிதம் இல்லா மண்டைகள் ….!