வீடுகளைக் காக்கும் போராட்டத்தில் பெப்பர் எஸ்டேட் குடியிருப்பாளர்கள்

1 pinangபினாங்கில் உள்ள பெப்பர் எஸ்டேட், வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு குடியிருப்பு என்று கூறும் அதன் குடியிருப்பாளர்கள் அதை அப்படியே பாதுகாக்க வேண்டும் என்கின்றனர்.

அக்குடியிருப்பு உள்ள நிலம் “கமுக்கமாக” ஒரு மேம்பாட்டு நிறுவனத்திடம் விற்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. அது, குடியிருப்பாளர்கள் சிலரை விலைக்கு வாங்கி வீடுகளை உடைத்துவருவதாகவும் ஒத்துவராதவர்களைக் காலிகளை வைத்து மிரட்டுவதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், குடியிருப்பாளர்கள் அவ்விடத்தைவிட்டு வெளியேற மறுத்து போராட்டத்தில் குதித்துள்ளனர்.

“40 ஆண்டுகளாக, சிலர் அதற்கும் மேலாக இங்கு வசித்து வருகிறார்கள். இது மட்டுமே எங்களுக்குத் தெரிந்த ஒரே தாய்வீடு”, என பெப்பர் எஸ்டேட் குடியிருப்பாளர் குழுவின் இடைக்கால தலைவர் என் ரோசாரியோ கூறினார்.

கெபுன் பூங்கா சட்டமன்ற உறுப்பினர் சியா இவ்விவகாரத்தில் தலையிட்டு தீர்வு காண முயன்று வருகிறார். மேம்பாட்டு நிறுவனம் புதன்கிழமை அவரையும் குடியிருப்பாளர்களையும் புதன்கிழமை சந்திப்பதாகக் கூறியுள்ளது.