கிழக்கு மலேசியாவில் வாக்குகள் வாங்கப்படுவது பரவலாக நிகழ்ந்துள்ளது என ஒர் ஆய்வாளரான பிரிட்கெட் வெல்ஷ் சொல்வதை பிஆர்எஸ் என்ற Parti Rakyat Sarawak தலைவர் ஜேம்ஸ் மாஸிங் மறுத்துள்ளார்.
“சரவாக்கில் மக்கள் வாங்கப்படுவதற்காக அவர்கள் எப்போதும் ஏழைகளாக இருக்க வேண்டும் என தேர்ந்தெடுக்கப்பட்ட பேராளர்கள் விரும்புவதாக பிரிட்கெட் வெல்ஷ் சொல்வது அபத்தமானது,” என்றார் அவர்.
“அவர் அந்த முடிவுக்கு வருவதற்கு மூன்றாம் உலக அரசியல்வாதிகள் பற்றி மிகவும் தாழ்வான கருத்தைக் கொண்டிருக்க வேண்டும்,” என தொடர்பு கொள்ளப்பட்ட போது மாஸிங் சொன்னார்.
கிழக்கு மலேசிய மாநிலங்களில் ஆளும் கட்சி அங்கு வாழும் பெரும்பான்மை மக்களுடைய வாழ்க்கைத் தரத்தில் அடிப்படை மாற்றங்கள் எதனையும் செய்யவில்லை என்னும் கருத்தை வெல்ஷ் இன்னொரு ஆய்வாளருடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.
அவர் நேற்று அனைத்துலக இஸ்லாமியப் பல்கலைக்கழகம் 13வது பொதுத் தேர்தல் மீது ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் பேசினார்.
ஒரு திருடன் பணத்தை திருடி வீட்டான் ,அவனிடம் போயி ,”டேய் திருடா நீ பணம் திருடினாயா” என்று கேட்டால் ,”நான் திருட வில்லை என்றுதான் பத்தி கொடுப்பான் “எனக்கு 100 வெள்ளி கொடுத்து பன் ஒட்டு போடா சொன்னார்கள் ,,இதை நான் ஒப்புக்கொள்கிறேன் ,,ஆனால் பணம் வாங்கினேன் பையில் போட்டேன் ,ஒட்டு மட்டு PKR ருக்க்தான் போட்டேன் ..