சுற்றுலா அமைச்சர் நஸ்ரி அப்துல் அசீஸ், அமைச்சரவை கடந்த ஆண்டே தேச நிந்தனைச் சட்டத்தை மீட்டுக்கொள்ள ஒப்புக்கொண்டு விட்டதாகக் கூறியுள்ளார்.
“அதை மீட்டுகொண்டு புதிய சட்டம் கொண்டுவருவது பற்றி சட்டத்துறை தலைவர் அலுவலகம் ஆராய்கிறது.
“அது பிரதமர் பொதுவில் அளித்த ஒரு வாக்குறுதி. அப்படி இருக்க எந்தவொரு அமைச்சரும் அதற்கு எதிராக செயல்படுவது ஏன் என்று எனக்குப் புரியவில்லை”, என நஸ்ரி நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.
உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜஹிட் ஹமிடி, தேச நிந்தனைச் சட்டத்தைத் தொடர்ந்து வைத்திருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.
தேச நிந்தனைச் சட்டத்தை மீட்டுக்கொள்ள அமைச்சரவை ஏற்கனவே தீர்மானித்து விட்டது அதற்க்கு பதிலாக காவல் நிலையத்தில் தமிழர்களை கொள்வது என்று முடிவு செய்து இருக்கிறது .