ஊடகங்களுக்கு எதிராக முன்னாள் போலீஸ் அதிகாரி வழக்கு

1 ramliவணிகக் குற்றப் புலன்விசாரணை துறையின் முன்னாள் இயக்குனர் ரம்லி யூசுப், நியு ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸ், த ஸ்டார், பெரித்தா ஹரியான், உத்துசான் மலேசியா,  டெய்லி எக்ஸ்பிரஸ், போர்னியோ போஸ்ட் ஆகிய நாளேடுகளுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடுத்துள்ளார்.

2007-இல், ஜோகூரில் ஒரு குற்றக்கும்பல் தலைவனுக்கு எதிராக தாம் நடவடிக்கை எடுத்ததை அடுத்து அவை  ‘கோப்கேட் விவகாரம்’ என்ற பெயரின்கீழ் பல செய்திகளை  வெளியிட்டன என்று கூறிய அவர்  அச்செய்திகள்  அவதூறு கூறுபவையாக இருந்தன என்பதுடன் அவை  பொய்யானவை என்றும் தம் மதிப்பைக் கெடுக்கும் நோக்கத்தைக் கொண்டிருந்தனவென்றும் கூறினார்.

அதன் விளைவாக தமக்கு ஏற்பட்ட அவப் பெயருக்கும் மனக் கலக்கத்துக்கும் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்றும் ரம்லி தம் மனுவில் கோரியுள்ளார்.